எப்படி இருந்த மனுஷன்? இப்படி ஆக்கிட்டீங்களேடா.. காதல் மன்னனாக விஜய்சேதுபதி நடித்த படங்கள்

sethu
சினிமா ஒரு நடிகரை உச்சத்திற்கு கொண்டு போகும். அதே சினிமா உச்சத்தில் இருந்த ஒரு நடிகரை ஒரே நொடியில் கீழேயும் தள்ளிவிடும். அதனால் சினிமா என்பது அவரவர் அதிர்ஷ்டத்தை பொறுத்துதான் அமையும். எப்போதுமே சினிமாவில் ஒரே இடத்தில் நிலைத்து நிற்க முடியாது. ஆனால் ஒரு சில நடிகர்கள் புகழின் எல்லைக்கே சென்றாலும் தங்கள் இடத்தை தக்க வைத்து கொள்கின்றனர்.
அதற்கு சில நடிகர்களை உதாரணமாக கூறலாம். ஆனால் விஜய் சேதுபதியை பொறுத்தவரைக்கும் அவர் முதலில் துணை நடிகராக நடிக்க ஆரம்பித்து வில்லனாக ஹீரோவாக அதன் பிறகு மீண்டும் வில்லனாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். தற்போது அஜித், விஜய் அளவுக்கு விஜய்சேதுபதிக்கும் ரசிகர் பட்டாளங்கள் இருக்கிறார்கள். ஹீரோவாகவே நடித்து வந்த விஜய்சேதுபதியை வில்லனாக மாற்றி பார்த்தது இந்த சினிமாதான்.
அதன் பிறகு மகாராஜா படம் தான் அவரை மீண்டும் பழைய இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்தது. இப்போது மீண்டும் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். விஜய், அஜித் ஆரம்பத்தில் காதல் மன்னன்களாகத்தான் தன்னை காட்டினார்கள். அதன் பிறகுதான் ஆக்ஷன் ஹீரோக்களாக மாறினார்கள். அப்படித்தான் விஜய்சேதுபதியும் ஆரம்பகாலங்களில் காதலை மையப்படுத்தி அமைந்த படங்களை நடித்து இப்படி ஒரு காதலன் நமக்கு கிடைக்கமாட்டானா என்று ஏங்கும் அளவுக்கு படங்களில் நடித்தார்.
அப்படி என்னென்ன படங்களில் காதல் மன்னனாக விஜய்சேதுபதி நடித்தார் என்பதை பற்றித்தான் இப்போது பார்க்க இருக்கிறோம். ரம்மி படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஜோடியாக நடித்தார் விஜய்சேதுபதி. அந்தப் படத்தில் அமைந்த கூட கூட வச்சு பாடல் எப்பேற்பட்ட காதல் பாடலாக அமைந்தது என எல்லாருக்குமே தெரியும். அந்த பாடலில் விஜய்சேதுபதியின் மேனரிசம் ரசித்துக் கொண்டிருக்கலாம் போலவே இருக்கும்.

அதை போல காதலும் கடந்து போகும் படத்திலும் விஜய்சேதுபதியின் எதார்த்தமான நடிப்பும் காதலை மனதிற்குள் மறைத்து வெளிப்படுத்த முடியாமல் அவர் திணறும் விதம் என படமே வித்தியாசமான கதைகளத்தில் அமைந்திருக்கும். அந்த மாதிரி விஜய் சேதுபதியை இனி எப்போது பார்க்க போகிறோம் என்றெல்லாம் ரசிகர்கள் ஏங்கி போயிருக்கின்றனர். அப்படியே கட் பண்ணால் 96 திரைப்படம்.
இது காலங்காலமாக நிலைத்து நிற்கும் காதல் காவியம் என்றே சொல்லலாம். இதுவரை யாரும் முயற்சி செய்யாத ஒரு கதை. ஆனால் எல்லாருக்குள்ளும் இருக்கிற வலி. பள்ளிப்பருவத்தில் காதலித்த ஒருத்தியை என்றைக்காவது பார்த்துவிட மாட்டோமா என்ற ஏக்கம் இருக்கும். அதை இந்தப் படத்தில் அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார். ஆனால் இப்போது விஜய்சேதுபதி ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மாறி கதைக்கு உயிர் கொடுக்கும் ஒரு நடிகராக மாறிவிட்டார்.