Vijaysethupathi: விஜய்சேதுபதி படத்தில் இணையும் அந்த ஹீரோ.. 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அதே மாஸ் கூட்டணி

by Rohini |   ( Updated:2025-04-13 01:59:02  )
sethu (1)
X

sethu (1)

Vijaysethupathi: விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. கடந்த 2024 ஆம் வருடம் அவருடைய நடிப்பில் வெளியான விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் மகாராஜா போன்ற திரைப்படங்கள் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. வெற்றி படங்களாக இரண்டு திரைப்படங்களுமே அமைந்து அவருடைய மார்க்கெட் பெரிய அளவில் உயர்ந்தது.

அதுவரை வில்லனாகவே நடித்து மக்கள் மத்தியில் ஒரு வில்லன் நடிகர் என்ற பெயரை வாங்கிய விஜய் சேதுபதி இந்த இரு திரைப்படங்களுக்கு பிறகு தன்னுடைய ஹீரோயிசத்தை காட்ட ஆரம்பித்தார். அதன் பிறகு அவர் தொடர்ந்து ஹீரோவாக பல படங்களில் கமிட்டானார். ஏற்கனவே மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்திலும் ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

அந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தை நடிகை ஷாமிலி மற்றும் பூரி ஜெகன்நாத் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்க உள்ளனர். இந்த நிலையில் இவருடைய மற்றொரு திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. கருடன், காக்கி சட்டை போன்ற படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது துரை செந்தில்குமார் லெஜன்ட் சரவணாவை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். அது முடிந்த பிறகு விஜய் சேதுபதியை வைத்து அந்த புதிய படத்தை ஆரம்பிக்க இருக்கிறார். இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவெனில் துரை செந்தில்குமார் இயக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து சசிகுமாரும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன்மூலம் 15 வருடங்களுக்குப் பிறகு சசிகுமார் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் இந்த படத்தில் இணைய உள்ளனர். இவர்கள் இருவரும் சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் சேர்ந்து நடித்திருந்தனர். சுந்திரபாண்டியன் படத்தில் சசிகுமார் ஹீரோவாகவும் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story