Categories: Cinema News latest news

பொன்னம்பலமாவது ஆனந்த்ராஜாவது! இனிமேல் இவர்தான் – பேன் இந்தியா வில்லனாக மாறிய விஜய்சேதுபதி

தமிழ் சினிமாவில் ஹீரோவாக சம்பாதிச்சதை விட வில்லனாக மக்கள் மத்தியில் மக்களின் செல்வாக்கை அதிகம் சம்பாதித்தவர் நடிகர் விஜய் சேதுபதி. ஆனால் அவர் நடித்த சேதுபதி படம் வரைக்கும் அனைத்து படங்களுமே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன பீசா, தர்மதுரை, ரம்மி போன்ற பல படங்கள் அவர் ஹீரோவாக நடித்து அதிக வரவேற்பை பெற்றன.

முதன்முதலாக மாஸ்டர் படத்தில் வில்லனாக அறிமுகமானார் விஜய் சேதுபதி. அந்தப் படத்தில் நடிக்கும் வரை விஜய் சேதுபதிக்கு மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு இருந்தது. அதனாலேயே மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்த அவரை மக்கள் கொண்டாட ஆரம்பித்தனர். மாஸ்டர் படத்திற்கு பிறகும் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் அந்தப் படங்கள் எதுவுமே நினைத்த அளவு வெற்றியடையவில்லை.

sethu1

வில்லன் சேதுபதியாகவே அவரை பார்க்க ஆரம்பித்தார்கள் ரசிகர்கள்.மீண்டும் விக்ரம் படத்தில் ஒரு வில்லன் வேடம். அந்தப் படத்திலும் ஒரு மாஸ் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் விஜய் சேதுபதி. அதனைத் தொடர்ந்து ஹிந்தியிலும் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.

இதையும் படிங்க : நான் நடிக்கனும்னா இந்த நடிகரும் நடிக்கணும்!.. விஜயகாந்த் போட்ட கண்டிஷன்.. அட அவரா?!…

அவ்வப்பொழுது ஹீரோவாக எட்டிப் பார்க்கும் விஜய் சேதுபதியை யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனாலேயே அவருடைய ஹீரோ மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி இப்போது ஒரு பேன் இந்தியா வில்லனாக மாறி இருக்கிறார். தெலுங்கு படத்திலும் ராம்சரணுக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம் விஜய் சேதுபதி.

ஜவான் படம் வெளியான பிறகு விஜய் சேதுபதியை உலகம் முழுவதும் அறியும் ஒரு நடிகராக அனைவரும் பார்ப்பார்கள். இதன் காரணமாகவே அவர் ஒப்பந்தமாகி இருக்கும் தெலுங்கு படத்திலும் ஒரு பெரிய ஹைப் இருக்கிறது என கோடம்பாக்கத்தில் கூறுகிறார்கள். இதை கருத்தில் கொண்டே அவரை ஹீரோவாக நடிக்க வாய்ப்புகளை கொடுக்க வரும் தயாரிப்பாளர்களிடம் 15 கோடி கேட்கிறாராம் விஜய் சேதுபதி.

sethu2

ஏனெனில் 15 கோடி கேட்டால் யாரும் தன்னை தேடி வர மாட்டார்கள்.இனிமேல் வில்லன் தான் நமக்கு செட் ஆகும் என்பதை அவர் முன்கூட்டியே அறிந்து விட்டார். 15 கோடி வாங்கிக் கொண்டு ஒரு படத்தில் நடித்து அந்த படம் ஓடவில்லை என்றால் அந்த இழப்பு நம்மை தான் சேரும் என்பதை நன்றாக அறிந்து வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி. இதுவே தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடிக்கும் பட்சத்தில் கோடி கோடியாக சம்பாதிக்கும் வாய்ப்பு இருக்கின்றது.

இதையும் படிங்க : கிடப்பில் போடப்பட்ட விஜயகாந்த் படம்!.. இது மட்டும் வந்திருந்தா அவர் நிலமையே வேற!..

Published by
Rohini