ரஜினிக்கு உரைக்கிற மாதிரி சொல்லுங்க! நடிகையை பற்றிய விஜய்சேதுபதியின் கருத்துக்கு ரசிகர்கள் கமெண்ட்

Vijaysethupathi: தமிழ் சினிமாவில் விஜய்சேதுபதி மக்களால் பெருமளவு கொண்டாடப்படும் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தொடர்ந்து பல நல்ல படங்களையே கொடுத்து வந்த விஜய் சேதுபதிக்கு சரியான படங்கள் வரவில்லை. ஆனால் அவர் வில்லனாக கலக்கும் அத்தனை படங்களும் ப்ளாக்பஸ்டர் வெற்றியை ருசிக்க தவறியதில்லை.

இருந்தாலும் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். தமிழ் மொழித் தவிர்ந்து தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என மாற்று மொழிப் படங்களிலும் ஒரு பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் விஜய்சேதுபதி.

இதையும் படிங்க: எல்லாம் ஒரு சூட்சமம்தான்! அடுத்தப்படத்திற்கு பக்காவா ஸ்கெட்ச் போட்டு தூக்கிய அஜித் – இதுக்குத்தான் அந்த புகழாரமா?

இந்த நிலையில் விஜய் சேதுபதி நடிகை கீர்த்திஷெட்டியை குறித்து பேசிய ஒரு தகவல் வைரலாகி வருகின்றது. அதாவது விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவந்த படம் லாபம். அந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது கீர்த்தி ஷெட்டிதானாம்.ஆனால் கீர்த்தி வேண்டாம் என விஜய்சேதுபதி கூறிவிட்டாராம்.

ஏன் கீர்த்தியை வேண்டாம் என்றேன் என்ற காரணத்தை விஜய்சேதுபதி கூறியிருக்கிறார். அந்த நேரத்தில் உப்பன்னா என்ற தெலுங்கு படத்தில் கீர்த்திக்கு அப்பாவாக விஜய்சேதுபதி நடித்துக் கொண்டிருந்தாராம். அதனால் எப்படி ஒரே நேர்த்தில் மகளாகவும் இன்னொரு பக்கம் ஜோடியாகவும் நடிக்க முடியும்?

இதையும் படிங்க: எப்பா இது ஆடியோ லாஞ்ச் இல்ல! கட்சி மாநாடு – இப்படி ஒரு ப்ளானோடு விஜய் இருப்பாருனு எதிர்பார்க்கல

அதுமட்டுமில்லாமல் அந்த நேரத்தில் கீர்த்திக்கு அவருடைய மகன் வயதுதான் இருக்குமாம். உப்பன்னா படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் கூட தன்னை அப்பாவாகவே நினைத்துக் கொள் என்று விஜய்சேதுபதி கீர்த்தியிடம் கூறினாராம்.

அப்படி இருக்கும் போது மகள் வயதில் இருக்கும் ஒருவருடன் என்னால் ரொமாண்டிக் பண்ண முடியாது என விஜய்சேதுபதி மறுத்துவிட்டாராம். விஜய்சேதுபதி கூறிய இந்த கருத்து ரஜினிக்கு வினையாக மாறியிருக்கிறது.

இதையும் படிங்க: எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்… வேதனையில் புலம்பும் மார்க் ஆண்டனி நடிகர்…

70 வயதை கடந்து இன்னும் ரஜினி நடிகைகளிடம் டூயட் பாடிக் கொண்டிருக்கிறார். ஆனால் விஜய்சேதுபதியின் கருத்து நிச்சயமாக வரவேற்கத்தக்கது. அதனால் இந்த செய்தி ரஜினி கண்ணில் படும் வரை பகிருங்கள் என ரசிகர்கள் ரஜினியின் ஹேஸ் டேக்கை போட்டு பதிவிட்டு வருகிறார்கள்.

 

Related Articles

Next Story