தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. ரசிகர்களால் மக்கள் செல்வம் என்ற அடைமொழியால் அழைக்கப்படும் ஒரு நல்ல மனிதர்.
ஆரம்பத்தில் ஒரு சாதாரண டப்பிங் யூனிட்டில் இருந்து வந்து ஒரு சிறு ஆர்டிஸ்ட்டாக பல தமிழ் படங்களில் நடித்து இன்று ஒரு மாபெரும் ஆளுமையாக உயர்ந்து நிற்கிறார் என்றால் முழுக்க முழுக்க அவருடைய கடின உழைப்பும் முயற்சியுமே காரணம்.
தன்னுடைய இமேஜை பற்றியும் கவலை கொள்ளாமல் முக்கியத்துவம் வாய்ந்த கதை என்றால் எந்த கதாபாத்திரம் என்றாலும் துணிந்து நடிக்கக்கூடிய இயல்பான நடிகர் விஜய் சேதுபதி.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழிப் படங்களில் நடித்துக் கொண்டு வரும் விஜய் சேதுபதி ஒரு பேன் இந்திய நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அனைவரிடமும் இயல்பாக பழகும் தன்மை கொண்டவர் விஜய் சேதுபதி. அதனாலேயே அனைவருக்கும் பிடித்த நடிகராகவும் வலம் வருகிறார். இந்த நிலையில் இன்று மே 1 உழைப்பாளர் தினம் என்பதால் பெப்சி யூனியன்கள் ஒன்று சேர்ந்து உழைப்பாளர் தினத்தை கொண்டாடி வருகின்றனர்.
அந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த விஜய் சேதுபதி மேடையில் தொழிலாளர்களுக்கு சிறந்த அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார். கூடவே இயக்குனர் செல்வமணி விஜய் சேதுபதி பற்றிய ஒரு உண்மையை கூறினார்.
அதாவது பெப்சி யூனியனில் பணி புரியும் 250 பேருக்கு வீடு கட்ட ஒரு கோடியே நாற்பது லட்சம் தொகை தேவைப்பட்டதாம். அதை ஒரு சமயம் செல்வமணி விஜய் சேதுபதியிடம் கூறி இருக்கிறார்.
உடனே விஜய் சேதுபதி தலா 50,000 என மொத்தம் 250 பேருக்கு தேவையான தொகையை செல்வமணியிடம் கொடுத்திருக்கிறார். ஆனால் அதிலும் ஒரு 30லட்சம் தொகை தேவைப்பட்டதாம். அதை மறு நாள் தனது உதவியாளர்கள் மூலம் செல்வமணியிடம் செக்காக விஜய் சேதுபதி கொடுத்தனுப்பினாராம். இதை மேடையில் செல்வமணி கூறும் போது விஜய்சேதுபதி மிகவும் கூச்சப்பட்டு நின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நடந்து போற தூரத்துக்கு ஆடி காரு வேணுமாம்!.. பழசெல்லாம் மறந்து போச்சா தனுஷ்?!…
சொர்க்கவாசல் படத்தின்…
Lokesh kanagaraj:…
தனுஷ் தயாரிச்ச…
மருத்துவராக இருந்தாலும்…
ஆர் ஜே…