
Cinema News
படத்துல மட்டும் இல்ல உண்மையிலும் நடிப்பேன்…! நிரூபிச்சிருக்காரு பாருங்க விஜய்சேதுபதி..!
சினிமாவில் தென்னிந்திய நடிகர்களில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய்சேதுபதி. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் தன் திறமையை காட்டி வருகிறார். அண்மையில் வெளிவந்த விக்ரம் படத்தில் சந்தனம் கதாபாத்திரத்தில் நெகடிவ் கேரக்டரில் நடித்து அசத்தினார்.
ஹீரோவாக மட்டுமில்லாமல் கதைக்கு ஏற்ற என்ன கதாபாத்திரமாக இருந்தாலும் அசராமல் நடிக்கும் ஒரே நடிகர் விஜய் சேதுபதி தான். ஆரம்பத்தில் துணை நடிகராக வந்தவர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளிவந்த தென்மேற்கு பருவகாற்று படத்தில் ஹீரோவாக நடித்து தன் திறமையை வெளிப்படுத்தினார்.
சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருப்பார். அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் திரையரங்குகளில் அனல் தெறிக்க விட்டிருப்பார். அவரின் அறிமுக காட்சி இந்த படத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.
இந்த நிலையில் இந்த காட்சியை பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ஆட்டோவில் இருந்து சட்டையில்லாமல் வெளியே வரும் போது முதலில் இந்த காட்சியில் நடிக்க பயந்தாராம். லோகேஷிடம் இந்த சீனுக்காக ரசிகர்கள் என்னை வச்சு செய்ய போறாங்கனு கூறினாராம். ஆனால் தியேட்டரில் பார்க்கும் போது சும்மா விசில் அடிச்சு தெறிக்க விட்டுடாங்க என கூறினார். ஆனால் இந்த காட்சியில் நடிக்க பயந்தேன் என கூறியது தான் ஏற்றுகொள்ள முடியவில்லை. எந்த கதாபாத்திரமானாலும் துணிந்து நடிக்க கூடிய விஜய் சேதுபதி பயப்படுறதாவது?