தப்பு சார்...முத்தம் கொடுக்கமாட்டேன்..! இயக்குனரிடம் கெஞ்சிய விஜய்சேதுபதி..
சினிமாவில் தென்னிந்திய நடிகர்களில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய்சேதுபதி. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் தன் திறமையை காட்டி வருகிறார். அண்மையில் வெளிவந்த விக்ரம் படத்தில் சந்தனம் கதாபாத்திரத்தில் நெகடிவ் கேரக்டரில் நடித்து அசத்தினார்.
ஹீரோவாக மட்டுமில்லாமல் கதைக்கு ஏற்ற என்ன கதாபாத்திரமாக இருந்தாலும் அசராமல் நடிக்கும் ஒரே நடிகர் விஜய் சேதுபதி தான். ஆரம்பத்தில் துணை நடிகராக வந்தவர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளிவந்த தென்மேற்கு பருவகாற்று படத்தில் ஹீரோவாக நடித்து தன் திறமையை வெளிப்படுத்தினார்.
இதே சீனு ராமசாமி கூட இணைந்து மாமனிதன் என்ற படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். கூடிய சீக்கிரம் படம் திரையில் வர காத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலைமையில் சீனு ராமசாமி ஒரு பேட்டியில் தென்மேற்கு பருவகாற்று படத்தில் விஜய்சேதுபதி , வசுந்தரா ஆகியோர் நடித்திருந்தனர். அப்போது ஒரு காட்சியில் நடிகையில் உதட்டில் ஏதோ கரை இருக்கு அதை துடைக்க போகும் போது முத்தம் கொடுத்தாலும் பரவாயில்லை.
ஆனால் முத்தம் கொடுக்க வேண்டுமே என்ற பயத்துடன் நடித்தால் சீன் சரியாக வராது. அதனால் முத்தல் கொடுக்கிற மாதிரி இருந்தால் கொடுத்து விடு. அதனால் வரும் விளைவுகளை பார்த்துக்கலாம் என்று கூறினாராம். ஆனால் விஜய்சேதுபதி ஹீரோயினுக்கு தெரியாமல் எப்படி கொடுப்பது? சொல்லிவிட்டு கொடுத்து விடலாம் என்று விஜய் சேதுபதி மிகவும் கெஞ்சினாராம். அதன் பின் தான் ஹீரோயினிடன் சொல்லிவிட்டு அந்த சீனை எடுத்தார்களாம்.