லைஃப்ல எந்த எல்லைக்கும் போறவரு.. ஒரு விஷயத்திற்கும் மட்டும் பயப்படுவாரு.. விஜய்சேதுபதி பற்றிய ரகசியத்தை பகிர்ந்த இயக்குனர்..
தமிழ் சினிமாவில் திறமை மட்டும் இருந்தால் போதும் ஜெயித்து விடலாம் என்பதற்கு தக்க உதாரணமாக இருப்பவர் நடிகர் விஜய்சேதுபதி. மக்கள் செல்வன் என ரசிகர்களால் மிகவும் பாசத்தோடு அழைக்கப்படுபவர். ஹீரோ, வில்லன், குணச்சித்திர நடிகர், கெஸ்ட் ரோல் என பல பரிணாமங்களில் விஜய் சேதுபதி நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
முதன் முதலில் கமலின் ‘ நம்மவர்’ படத்தின் ஆடிஷனில் கலந்து கொண்டு பார்ப்பதற்கு சின்ன பையனாக இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டார் விஜய்சேதுபதி. ஆனால் அதே கமல் படமான விக்ரமில் அவருக்கு நிகரான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து நான் யாருனு தெரியுமா? என்று சொல்லாமல் சொல்லி காட்டினார்.
அவர் கெரியரிலேயே முதன் முதலாக விமர்சன ரீதியாக வெற்றிப் பெற்ற படம் ‘தென்மேற்கு பருவக்காற்று’ திரைப்படம். இந்தப் படத்திற்காக மூன்று தேசிய விருதுகள் கிடைத்தன. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நடித்து தன்னை ஒரு கலைஞனாக நிரூபித்துக் காட்டியவர் விஜய் சேதுபதி.
இன்று பாலிவுட் வரைக்கும் தன்னை பெருமைப் படுத்தி வருகிறார். இந்த நிலையில் விஜய் சேதுபதியை பற்றிய ஒரு ரகசியத்தை ‘96’ படத்தின் இயக்குனர் பிரேம்குமார் கூறியது வைரலாகி வருகிறது. அதாவது விஜய்சேதுபதி டிராவல் என்பதே சுத்தமாக பிடிக்காதாம்.
ஷூட்டிங் முடிந்து அவரை வீட்டில் விட்டாலே போதுமாம். போய் சும்மா வீட்டில் இருக்கிற ஆள் விஜய்சேதுபதி என கூறி 96 படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் நடந்த ஒரு விஷயத்தை பகிர்ந்திருக்கிறார், அந்தப் படத்தில் ஒரு பாடலுக்காக அந்தமானில் 4 நாள்கள் படப்பிடிப்பை நடத்தினார்களாம். அதை வைத்தே அந்தப் பாடலின் மீதி காட்சிகளை எடிட் பண்ணிடலாமேனு விஜய்சேதுபதி சொன்னாராம்.
ஆனால் பிரேம் குமார் ‘இல்ல சார், இதனை அடுத்து கல்கத்தா போறோம், அதற்கு அடுத்தபடியாக ஜெய்ப்பூர், ஜோத்பூர், ஜெய்சால்மர், மணாலி இங்கெல்லாம் படப்பிடிப்பு முடிச்சுட்டு தான் சென்னைக்கே போறோம்’ என்று சொன்னதும் விஜய்சேதுபதி அப்படியே அமைதியாகி விட்டாராம்.
இதையும் படிங்க : ரோட்டில் ஐஸ்கிரீம் விற்கும் குட்டி விஜய்!.. அட இவருக்கா இந்த நிலைமை?!…