நீ என்ன பெரிய இவனா..? விஜய்சேதுபதியை கன்னாபின்னானு கேள்வி கேட்ட நடிகர்..!

by Rohini |   ( Updated:2022-06-24 14:35:07  )
sethu_main_cine
X

சினிமாவில் தென்னிந்திய நடிகர்களில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய்சேதுபதி. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் தன் திறமையை காட்டி வருகிறார். அண்மையில் வெளிவந்த விக்ரம் படத்தில் சந்தனம் கதாபாத்திரத்தில் நெகடிவ் கேரக்டரில் நடித்து அசத்தினார்.

sethu1_cine

ஹீரோவாக மட்டுமில்லாமல் கதைக்கு ஏற்ற என்ன கதாபாத்திரமாக இருந்தாலும் அசராமல் நடிக்கும் ஒரே நடிகர் விஜய் சேதுபதி தான். ஆரம்பத்தில் துணை நடிகராக வந்தவர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளிவந்த தென்மேற்கு பருவகாற்று படத்தில் ஹீரோவாக நடித்து தன் திறமையை வெளிப்படுத்தினார்.
sethu2_cine

அதன் பின் தொடர்ச்சியாக தன் எதார்த்தமான நடிப்பால் மக்கள் மனதை கொள்ளை கொண்டார். நடிப்பில் மட்டுமில்லாமல் நிஜவாழ்க்கையிலும் எதார்த்தத்தை கடைப்பிடிக்க கூடியவர். தெனாவட்டான பேச்சு, வெட்டி பந்தா எதுவுமே இல்லாத உன்னதமான நடிகர். இவரின் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸாகி இருக்கும் படம் ’மாமனிதன்’.

sethu3_cine

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதியுடன் ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார். படம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. காயத்ரி , விஜய் சேதுபதியின் நடிப்பை ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் படம் பார்த்து வெளியே வந்த நடிகர் கூல் சுரேஷ் “ மிஸ்டர் விஜய் சேதுபதி, மிஸ்டர் விஜய் சேதுபதி.. நீ என்ன பெரிய கருப்பு கமலஹாசனா? என்று கேட்டுவிட்டு ஆமாய்யா நீ கருப்பு கமலஹாசனே தான். என்ன நடிப்பு. நடிக்கவில்லை. மாமனிதாகவே வாழ்ந்திருக்கிறார் என்று புகழாரம் சூடினார் கூல் சுரேஷ்.

Next Story