மூன்று மனைவிகள் இருந்தும் ஆசை அடங்கலயே...!! ’விக்ரம்’ல் அந்த காட்சியில் நடித்ததை பற்றி கூறும் மைனா..
விக்ரம் படம் வெளியாகி வசூலிலும் சரி ஓட்டத்திலும் சரி திரைக்கு வந்த எல்லாப் படங்களையும் ஓரங்கட்டி முன்னுக்கு வந்து நிற்கிறது. லோகேஷின் இந்த பிரம்மாண்டத்தில் இருந்து படம் பார்த்தவர்கள் இன்னும் பழைய நிலைக்கு மீள முடியவில்லை. அப்படி ஒரு தாக்கத்தை இந்தப் படம் ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.
படத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உட்பட பலரும் நடித்திருக்கின்றனர். கதைப்படி விஜய் சேதுபதிக்கு மூன்று மனைவிகள். விஜே மகேஸ்வரி, விஜய் டிவி புகழ் மைனா மற்றும் ஷிவானி நாராயணன். அதில் மைனாவில் கதாபாத்திரம் ஓரளவிற்கு விஜய் சேதுபதியை சுற்றி வரும்.
இதில் ஒரு காட்சியில் விஜய் சேதுபதி நடுவில் உட்கார வலது, இடது பக்கத்தில் மைனாவை தவிர மற்ற இரு மனைவிகள் அவர் கையை பிடித்துக் கொள்வார்கள். மைனா விஜய் சேதுபதி பின்னாடி நின்று கொண்டிருப்பார். என்ன் செய்வதென்று தெரியாமல் எதேச்சையாக விஜய் சேதுபதி கழுத்தை பிடித்து குனிந்து அவரை பார்த்து சிரிப்பார்.
இதைப் பார்த்ததும் விஜய் சேதுபதி மைனாவிடம் நானே கட்டிப்பிடிங்கனு சொல்லனும்னு நினைச்சேன். நீங்களே பண்ணிட்டீங்க. இப்படி இருந்தால் தான் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் என்று கூறினாராம். இதை மைனா மிகவும் உணர்ச்சிவச பட்டு கூறினார்.