தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் துணை நடிகராக பல படங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்த படத்தில் இருந்து தொடர்ந்து ஹீரோவாக பல படங்களில் நடித்து மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றார். இவருடைய ஹியூமர் மக்களுக்கு மிகவும் பிடித்து போனது.
அதன் பிறகு பேட்ட திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமானார். அந்த படத்தில் அவரின் வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதோடு தொடர்ந்து வில்லனாகவே அவர் பல படங்களில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமல்ல தெலுங்கு ஹிந்தி என பிற மொழி படங்களிலும் வில்லனாக அவர் நடித்து வந்தார். இதற்கிடையில் மகாராஜா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை அடுத்து இனிமேல் வில்லனாக நடிக்க மாட்டேன். ஹீரோவாகவே நடிப்பேன் என உறுதியாக இருந்தார்.
இந்த நிலையில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இன்னொரு பக்கம் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பிஸியாக இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கும் விதம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. போட்டியாளர்களை பந்தாடி வருகிறார் விஜய் சேதுபதி. வாரா வாரம் அவருடைய புதிய கெட்டப்பும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த வாரம் அவர் வித்தியாசமான கெட்டப்பில் வந்தார். அதை நெட்டிசன்கள் கிண்டலாகவும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர். ஆனால் அந்த கெட்டப்பில் ஒரு சீக்ரெட் ஒளிந்திருக்கிறது. அந்த கெட்டப்பை பார்த்ததும் ஜெயிலர் 2 படத்திற்காக அவருடைய புது கெட்டப்பா என்று அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால் அது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ஒரு புதிய படத்திற்கான கெட்டப் என்று தெரிய வந்திருக்கிறது.

அந்த படத்தை அட்லீ தயாரிக்கிறார். பாலாஜி தரணிதரன் அந்த கெட்டப்பை வெளியில் தெரியாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என சீக்ரெட்டாக வைத்திருந்தாராம். ஆனால் பிக் பாஸில் வாராவாரம் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதால் பரவாயில்லை என சொல்லி கொண்டதன் பேரில் அந்த நியூ கெட்டப்பில் கடந்த வாரம் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்கிறார் விஜய் சேதுபதி.
