பணத்தை கொட்டி கொடுக்கும் தயாரிப்பாளரையே மிரளவைத்த விஜய் சேதுபதி.! அப்படி ஒரு தொகை அது.!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு தற்போது இந்திய அளவில் மார்க்கெட் வளர்ந்துள்ளது. அவருடைய கால்ஷீட்க்காக பாலிவுட் படக்குழுவே காத்திருக்கும் சூழல் கூட உருவாகியுள்ளது. அதே போல அவரது சம்பளமும் கணிசமாக அல்ல, நன்றாகவே உயர்ந்துள்ளது.
மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிப்பதற்கே 10 கோடி சம்பளம் கேட்டு மிரவைத்தார்.அதையும் படக்குழு கொடுத்தது. உண்மையில் கொடுத்த காசுக்கு அதிகமாகவே தனது பெர்பார்மன்ஸில் பின்னியிருந்தார் விஜய் சேதுபதி.
தற்போது விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக நடித்து வருகிறார். இதே போல மற்ற படங்களிலும் அவரை வில்லனாக கமிட் செய்ய திரையுலகினர் முயன்று வருகின்றனர். அவர்களுக்கு தனது சம்பள உயர்வை ஷாக் நியூஸ்ஆக கொடுத்து வருகிறார்.
இதையும் படியுங்களேன் –டீசர்-னு சொல்லிட்டு முழு படத்தையும் போட்டு காட்டுறீங்க.?! அதிர்ச்சியில் சூர்யா ரசிகர்கள்.!
தெலுங்கு பிரமாண்ட தயாரிப்பாளர் தில் ராஜு, தற்போது விஜய் படத்தையும், ஷங்கர் இயக்கும் ராம்சரண் படத்தையும் தயாரித்து வருகிறார். நடிகர்களுக்கு குறை வைக்காமல் அதிக சம்பளம் கொடுத்து நடிக்க வைப்பதில் தில் ராஜூவை அடித்து கொள்ள ஆள் இல்லை. நடிகர் விஜய் இது வரை வாங்காத சம்பளம் தான் தளபதி66-க்காக அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளதாம்,
அப்படி இருக்க ஷங்கர் படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேத்துப்பதியை தான் படக்குழு முதலில் அணுகியுள்ளது. ஆனால், படக்குழுவை அதிர வைக்கும் அளவில் சம்பளத்தை கூறி பிரமாண்ட தயாரிப்பாளரை அதிர வைத்துள்ளார் விஜய் சேதுபதி. அதானல் படக்குழு தற்போது எஸ்.ஜே.சூர்யா பக்கம் கவனத்தை செலுத்தியுள்ளது.