அவன் மட்டும் என் கையில கிடைச்சான்? – விஜய்சேதுபதியின் கோபத்திற்கு ஆளான அந்த நபர் யார் தெரியுமா?

Published on: May 14, 2023
sethu
---Advertisement---

கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. துணை நடிகராக நடிக்க வந்து அதன் பிறகு தன்னுடைய விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் ஒரு தன்னிகரற்ற நடிகராக இன்றுவரை மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார். மிகவும் எதார்த்தமாக நடிக்க கூடிய நடிகர் .அதனால் மக்கள் செல்வன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் நடிகராக விஜய் சேதுபதி திகழ்ந்து வருகிறார்.

sethu1
sethu1

ஒரு பேன் இந்தியா நடிகராக இன்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். கோலிவுட், டோலிவுட் ,பாலிவுட் என அனைத்து சினிமா படங்களிலும் நடித்து அனைவரையும் தன் வசப்படுத்தி இருக்கிறார் விஜய் சேதுபதி. இந்த நிலையில் தன் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவத்தை நினைவு கூர்ந்து ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் மக்கள் செல்வன்.

அதாவது விஜய் சேதுபதி ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது ஏகப்பட்ட அவமானங்களை சந்தித்தாராம். இயல்பாகவே விஜய் சேதுபதி மிகவும் சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் பேசக்கூடியவர். அதனால் ஆரம்பத்தில் அப்படியே தான் இருந்திருக்கிறார். இதை ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது படப்பிடிப்பு தளத்தில் இவரின் அந்த சுறுசுறுப்பை பார்த்த ஒரு கேமரா மேன் விஜய் சேதுபதியிடம் “நீ என்ன சுறுசுறுப்பாக இருந்தால் பெரிய இவனா?” என கேட்டாராம்.

sethu2
sethu2

இதை அந்த கேமராமன் ஏதோ சீன் போடுறாரு போல என நினைத்துக் கொண்டு அந்த மாதிரி விஜய் சேதுபதியை அவமானமாக பேசியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அந்த படத்தின் இயக்குனரிடமும் அவனுக்கு இந்த வேடத்தை கொடுக்க வேண்டாம் எனவும் சொல்லி இருக்கிறார். அதன் பிறகு விஜய் சேதுபதி ஏதோ சமாதானப்படுத்தி அந்த படத்தில் நடித்தாராம். அதிலிருந்து விஜய் சேதுபதி அந்த கேமரா மேனே தேடிக்கொண்டு இருக்கிறாராம். இப்பொழுது விஜய் சேதுபதியின் வளர்ச்சி யாரும் எட்ட முடியாத வளர்ச்சியாக இருக்கிறது. தன் வாழ்க்கையில் தேடிக்கொண்டிருக்கும் ஒரே நபர் அந்த கேமரா மேன் என்று ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் விஜய் சேதுபதி.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.