வந்தா மொத்தமா வர்றாங்க! விஜய்சேதுபதியின் ‘Ace’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு..

sethu
Vijaysethupathi: தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடித்தமான ஒரு நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது அவருடைய புதிய படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது. கைவசம் ஏராளமான படங்களை வைத்திருக்கும் விஜய் சேதுபதி ஆறுமுக குமார் இயக்கத்தில் ஆஷ் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். அந்த படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய தகவல் தான் தற்போது கிடைத்திருக்கிறது .
விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து மகாராஜா மற்றும் விடுதலை போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றன. அதற்கு முன்பு வரை வில்லனாகவே அவரைப் பார்த்த ரசிகர்களுக்கு அவர் மீண்டும் ஹீரோவாக நடித்த இந்த இரு திரைப்படங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றது. அதிலிருந்து தொடர்ந்து விஜய் சேதுபதி ஹீரோவாகவே பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
அந்த வகையில் ஆறுமுக குமார் இயக்கத்தில் ஆஷ் என்ற திரைப்படத்தில் நடித்த விஜய் சேதுபதி இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்திருக்கிறார். இவர்களுடன் யோகி பாபு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் மே 23ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மே மாதம் ஏராளமான திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன.

சூர்யாவின் நடிப்பில் ரெட்ரோ திரைப்படம் மே ஒன்றாம் தேதி தான் ரிலீஸ் ஆக இருக்கின்றது. அதே தேதியில் டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படமும் வெளியாக இருக்கின்றது. இந்த படத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். அடுத்து மே நான்காம் தேதி மகத் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோரின் நடிப்பில் கெட்டவனு பேரு எடுத்த நல்லவன்டா என்ற திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கின்றது.
அதேபோல வேதிகாவின் நடிப்பில் கஜானா என்ற திரைப்படமும் மே ஒன்பதாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கின்றது. இப்படி மே மாதம் அடுத்தடுத்து பல திரைப்படங்கள் ரிலீசுக்கு காத்துக் கொண்டிருக்கின்றன .அந்த வகையில் விஜய் சேதுபதியின் திரைப்படமும் 23ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கின்றது.