நெசமாத்தான் சொல்றீங்களா...? தளபதி 66-ல் விஜய் பண்ற காரியத்தை பாருங்க...!
தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘தளபதி 66’ நடிகர் விஜய் நடிக்க இருக்கிறார். இப்படம் மூலம் நடிகர் விஜய் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்.
தில் ராஜ் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடிகர் சரத்குமார் நடிக்க உள்ளார். விஜய்க்கு அண்ணனாக மைக் மோகன் நடிக்க உள்ளதாக தகவல் வந்தது .ஆனால் நடிகர் ஷியாம் தான் விஜய்க்கு அண்ணனாக நடிக்கிறார். கதையின் படி சரத்குமாரின் 3வது மகனாக விஜய் நடிக்க உள்ளார்.
தளபதி 66 படத்திற்கான பாடல்வரிகள்,வசனங்கள்,திரைக்கதை ஆகியவற்றை பாடலாசிரியர் விவேக் எழுதுவதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கான இசையை இரவுபகலாக தயார் செய்கிறார் தமன் . பாடல் சிறப்பாக அமையவேண்டும் என்பதற்காக தயாரிப்பாளர் தில் ராஜ் கூடவே இருந்து பார்த்துக்கொள்கிறாராம்.
இந்த நிலையில் படத்தின் ஓபனிங் சாங் பாடுவதாக தகவல் வந்தது. கூடிய சீக்கிரம் தளபதி 66 ஃபர்ஸ்ட் சிங்கிளை தமன் வெளியிடுவார் என எதிர்பார்க்கபடுகிறது. இன்னொரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் தெலுங்கிலும் விஜய் தான் இந்த பாடலையும் பாடப் போகிறாராம். விஜய் பாடுவதை பார்த்துக் கொண்டே இருக்கும் ரசிகர்கள் தெலுங்கில் அவர் பாடுவது எப்படி இருக்கும் என ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருப்பர்.