முத்து-மீனா பிரச்னை முடிஞ்சிது… அரசுவேலைக்கு தயாராகும் செந்தில்.. எழில் பிறந்தநாளுக்கு வருவாரா?
VijayTv: சிறகடிக்க ஆசை தொடரில் முத்துவை வந்து மீனாவின் அம்மா மற்றும் சீதா இருவரும் பார்த்து பேசி விட்டு செல்கின்றனர். மீனா தன்னுடன் பூ கட்டும் பெண்களுடன் வீட்டில் நடந்த விஷயங்களை கூறி வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். அவருக்கு இந்திரா கால் செய்து மாப்பிள்ளையிடம் பேசினேன் என கூறுகிறார்.
முத்து சவாரிக்கு செல்ல அங்கு ஒரு பெண் அழுது கொண்டே வருகிறார். காரில் ஏறியும் அவர் அழுது கொண்டே இருக்க முத்து என்ன ஆனது எதுவும் என்றால் உதவி செய்கிறேன் என கூறுகிறார். அவர் தன் அண்ணனுக்கும் தன் கணவருக்கும் இருக்கும் பிரச்சினையை கூற முத்து மீனாவை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க: அந்த படம் பிரசாந்துக்கு சொன்னது… மொக்க காரணத்தால் மிஸ்ஸான அஜித்தின் சூப்பர்ஹிட் திரைப்படம்..
பாக்கியலட்சுமி தொடரில் ஈஸ்வரி எழிலை வரவேண்டாம் என கூறிவிட்டு ஃபோனை வைக்க ராமமூர்த்தி ஏன் அப்படி கூறினாய் என கேட்கிறார். அவன் வரேன் சொல்லவே இல்லையே அந்த கோபத்தில் சொல்லிவிட்டேன் என்கிறார். செழியன் பங்க்ஷனுக்கு பரபரப்பாக வேலை செய்து கொண்டிருக்கிறார். எழில் வராததை நினைத்து வருத்தப்படுகிறார்.
ரூமில் இருக்கும் இனியா மற்றும் பாக்யா இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். என்னையும் செழியன் அண்ணாவையும் அனுப்புனதே இல்லை. எழில் அண்ணாவை மட்டும் ஏன் வீட்டை விட்டு அனுப்பி விட்டீங்க என கேட்கிறார். அதுக்கு ஒரு காரணம் இருக்கு என பாக்கிய கூறிவிடுகிறார். ஈஸ்வரி ராமமூர்த்திக்கு 12 மணிக்கு வாழ்த்து கூற காத்திருக்கிறார்.
இதையும் படிங்க:தங்கலான் வெற்றி வெற்றின்னு சொல்லி யாரை ஏமாத்துற… பயில்வான் காட்டம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரில் முத்துவின் வீட்டில் ராஜீ அம்மாவின் அண்ணனை அழைத்து அவர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது நகை வாங்கியதை குறித்து அவரிடம் கேட்க அவர் நான் என் தங்கையிடம் எதுவும் வாங்கினேன் என சண்டை போட்டுவிட்டு கிளம்பி சென்று விடுகிறார். இதில் கடுப்பான முத்துவில் நகையை என்ன செய்தாய்? அதை சொல்லும் வரை இந்த வீட்டில் சாப்பிட கூடாது என கூறி சென்று விடுகிறார்.
செந்தில் மற்றும் மீனா இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அரசு வேலைக்கு கொடுத்திருக்கும் விளம்பரத்தை வைத்து பேசிக்கொண்டிருக்கும்போது அதற்கு அப்ளை செய்யலாம் என இருப்பதாகவும் செந்தில் மீனாவிடம் கூறுகிறார். இதனுடன் இன்றைய எபிசோடுகள் முடிந்தது.