கோபத்தில் முத்து… எழிலை நினைத்து அழுகும் பாக்கியா… மொக்கை வாங்கிய மயில்..

by Akhilan |   ( Updated:2024-08-19 05:05:34  )
கோபத்தில் முத்து… எழிலை  நினைத்து அழுகும் பாக்கியா… மொக்கை வாங்கிய மயில்..
X

VijayTv: சிறகடிக்க ஆசை தொடரில் சத்யாவை இவன் கூட சேர்ந்து சுத்தாதே. நாளைக்கு உன்னை மாட்டி விட்டுடுவான் என்கிறார். சத்யா நீங்க கவலைப்படாதீங்க என்கிறார். சீதாவை ஹாஸ்பிட்டலில் சந்திக்கும் ஸ்ருதி கிப்ட் கொடுத்துவிட்டு வாடகைதாய் மூலம் குழந்தை பெத்துக்கொள்ள போவதாகவும், யாரிடமும் சொல்ல வேண்டாம் எனவும் கூறுகிறார்.

சத்யாவுக்கு கை சரியாகிவிட்டால் கூழ் ஊத்த போலாம் என்கிறார். அக்காவை கூப்பிடலாம். அந்த ஆள்ளை கூப்பிட கூடாது என்கிறார். இதை மீனாவிடம் சொல்ல அவர் கோபப்படுகிறார். முத்து நீ போககூடாது எனச் சொல்லிவிட்டு செல்கிறார். மீனா கவலையாக அமர்ந்து இருக்க அங்கு வரும் ஸ்ருதி நீங்க போங்காவரு என்ன சொல்றது என அட்வைஸ் செய்கிறார்.

இதையும் படிங்க: உன் போட்டோவ விடிய விடிய பாக்கலாம்!.. இளசுகளை ஏங்க வைத்த பிரியா பவானி சங்கர்!..

பாக்கியலட்சுமி தொடரில் எழிலை வந்து ஹோட்டலில் சந்திக்கிறார் கோபி. பாக்கியாவை திட்ட அம்மா செய்வது சரிதான் என்கிறார். செலவுக்கு காசு கொடுக்க அவர் அதை வாங்க மறுத்துவிடுகிறார். வீட்டில் எல்லாரும் சோகமாக அமர்ந்து இருக்க பாக்கியா எல்லாருக்கும் ஆறுதல் சொல்கிறார்.

ராமமூர்த்தியின் 80வது பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடலாம் என முடிவெடுக்கிறார்கள். எழில் வருவானா என ஈஸ்வரி கேட்க வருவாங்க என்கிறார். ரூமுக்கு செல்லும் பாக்கியா எழிலை நினைச்சு கண்ணீர் விட்டு கலங்குகிறார். அமிர்தாவுக்கு கால் செய்து பாக்கியா பேசுகிறார்.

இதையும் படிங்க: இந்த படம் ஓடுமா?!.. பயந்து போன இப்ராஹிம் ராவுத்தர்… கோபப்பட்ட விஜயகாந்த்….

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன்2 தொடரில் மயில் தூங்காமல் இருக்க சரவணன் தூங்கி எழுகிறார். மயில் அம்மா அப்போ நீயே சமாதானமாக போக கொஞ்சம் கோவப்படு அப்புறம் கொஞ்சிக்கோ வேற வழியில்லை என்கிறார். மீனா செந்திலை திட்டிக்கொண்டு இருக்கிறார். வீட்டில் இருப்பவர்களுக்கு ஹனிமூன் போட்டோவை அனுப்பி வைக்கிறார் மயில்.

எல்லாரும் கால் செய்து அவருக்கு பேசுகின்றனர். பின்னர் மயிலுக்கு பாண்டியனும் ஆடியோ அனுப்பி வாழ்த்துக்களை கூறுகிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

Next Story