VijayTV: த்ரிஷ்யம் கதையை சுட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ்2… சிறகடிக்க ஆசை எந்த படம் தெரியுமா? இந்த வார புரோமோ…

by Akhilan |
VijayTV: த்ரிஷ்யம் கதையை சுட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ்2… சிறகடிக்க ஆசை எந்த படம் தெரியுமா? இந்த வார புரோமோ…
X

VijayTV: விஜய் தொலைக்காட்சியில் இந்த வாரம் சிறகடிக்க ஆசை மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடர் பிரபல கோலிவுட் திரைப்படங்களின் கதையை லாபகமாக எடுத்திருக்கும் விஷயம் வார புரோமோவின் மூலம் வெளியாகி இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடங்கப்பட்டபோது பெரிய அளவில் ரசிகர்களிடம் ஆர்வம் இல்லை. எல்லா சீரியல் போல இதுவும் இரண்டாவது சீசன் பெரிய அளவில் ரசிகர்களிடம் ஏமாற்றத்தை தான் கொடுக்கும் என முதலில் இணைக்கப்பட்டது.

ஆனால் எபிசோடுகள் செல்ல செல்ல முதல் சீசனின் ஆர்வத்தை விட இது ரசிகர்களிடம் பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களாக அரசியின் காதல் விவகாரம் வீட்டில் தெரிந்து பாண்டியன் இடிந்து போன விஷயங்கள் எல்லாம் வெளிவந்தது.

இதைத்தொடர்ந்து அவர் தந்தை சொன்ன பையனை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துவிட்டார். இதற்கிடையில் கோமதி தன்னுடைய மகள் மற்றும் மருமகள்களை அழைத்துக் கொண்டு அம்பாசமுத்திரத்திற்கு சாமி கும்பிட சென்று இருக்கிறார்.

கதைக்களம் அங்கு பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் குமார் அரசியை காண நேரில் வருகிறார். தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவின் படி இரவு அரசியை காண வரும் குமார் அவரை தன்னை கல்யாணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்துகிறார்.

குமாரை வீட்டிற்குள் பார்த்த கோமதி சத்தம் போட குமாரை தோசை கல்லால் அடித்து விடுகிறார் மீனா. அவர் பேச்சு மூச்சு இல்லாமல் கீழே விழுந்து கிடக்க மூவரும் பயந்து வெளியில் போய் உட்கார்ந்து இருக்கின்றனர். குமாரை கொண்டு விட்டனர் இல்லை அவர் பாடியை இவர்கள் அப்புறப்படுத்த இனிமேல் காட்சிகள் வருமா என்பதை எபிசோடுகளில் காணலாம்.

அதுபோல சிறகடிக்க ஆசை தொடரில் மீனாவின் பணத்தை சிந்தாமணி தான் திருடி இருக்கிறார் என்பதால் அதை கண்டுபிடிக்க இன்கம்டேக்ஸ் ஆபிசர் மூலம் முத்து அவர் வீட்டிற்கு செல்கிறார். அங்கே மீனாவின் பணம் பையுடன் அப்படியே இருப்பதால் அதை எடுத்துக்கொண்டு வெளியில் வந்து விடுகிறார்.

சிந்தாமணி வீட்டிற்கு வர சோதனை போட்டார்கள் என தன்னுடைய வேலையாட்கள் மூலம் தெரிந்து கொள்கிறாள். அந்த நேரத்தில் மீனா போன் செய்து என்னுடைய பணம் என்னிடமே வந்துவிட்டது. இனிமேலாவது நீங்க வாழுங்க எங்களையும் வாழ விடுங்க என சொல்லி போனை வைக்கிறார்.

Next Story