இந்த மூஞ்ச நீங்க பாத்துதான் ஆகனும்.! சொன்னதை செய்து காட்டிய SAC.!

தளபதி விஜய் தான் தற்போதைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். அவர்தான் தமிழ் சினிமா ஹீரோக்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர். அவர்தான் ரஜினியை மிஞ்சி அதிக சம்பளம் வாங்குகிறார் என்பதே நிதர்சனமான உண்மை.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் விஜயை ஹீரோவாக வைத்து இயக்கிய திரைப்படங்கள் முதலில் தோல்வியையே தழுவின. இருந்தாலும் அவர் சோர்ந்து போகவில்லை. இவர் நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுகமானபோது இந்த மூஞ்சி எல்லாம் யார் காசு கொடுத்து பார்க்க வருவார்கள் என்று சில பத்திரிகைகள் விமர்சனம் செய்திருந்தனர்.

அதனை பார்த்த எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகனை எப்படியும் மிகப் பெரிய ஹீரோவாக்கி விடவேண்டும் என்று தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்கள் இயக்கி முடித்தார்.

அதில் மூன்றாவது திரைப்படமான ரசிகன் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு விக்ரமன் இயக்கத்தில் உருவான பூவே உனக்காக திரைப்படத்தின் மிக பெரிய வெற்றியின் மூலம் விஜய் தனெக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இதனை எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருப்பார். இந்த குதிரை ஜெயிக்காது என கூறினார்கள். அதன் மீதி நம்பிபணம் கட்டி, தற்போது அனைவரும் வியக்கும் வண்ணம் ஜெயிக்கும் குதிரையாக மாற்றினேன் என பெருமை பொங்க தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் - அப்பாஸ் முதல் கமல்ஹாசன் வரை.! சிம்ரன் உண்மையில் காதல் இளவரசி தான்.!

அதன் பிறகு அடுத்தடுத்த சூப்பர் ஹிட் திரைப்படங்கள் கொடுத்த விஜய் முன்னணி நடிகர் வரிசையில் இணைந்து விட்டார்.

அதற்கடுத்ததாக அடுத்தடுத்த பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்து தற்போது உச்ச நட்சத்திரமாக உயர்ந்த விட்டார். இவர் நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி ரிலீசாக உள்ளது. அதனை வரவேற்க ரசிகர்கள் தற்போது ஆயத்தமாகி வருகின்றனர்.

 

Related Articles

Next Story