Connect with us
banner

காத்து போன பலூனாக தளபதி-66…! எல்லாத்துக்கும் காரணம் இந்த லோகேஷ் தான்…!

vijay_main_cine

Cinema News

காத்து போன பலூனாக தளபதி-66…! எல்லாத்துக்கும் காரணம் இந்த லோகேஷ் தான்…!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் விக்ரம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் பட்டையை கிளப்பி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.மேலும் பாக்ஸ் ஆஃபிஸிலும் மாபெரும் சாதனையை வசூலித்து வருகிறது.

vijay1_cine

இந்த நிலையில் விக்ரம் படம் வருவதற்கு முன் மக்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த அப்டேட்ஸ் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி – 66. இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப் பட்டதில் இருந்து யாரெல்லாம் நடிக்க போகிறார்கள்? என்னென்ன கதாபாத்திரங்கள் என சமூக வலைதளங்களில் தினமும் தகவல்கள் பரிமாறிக் கொண்டு இருந்தன.

vijay2_cine

ஆனால் விக்ரம் படம் ரிலீஸ் ஆனதில் லோகேஷின் தாக்கம் சினிமா பிரபலங்கள் மத்தியில் அதிகமாகி விட்டது. தளபதி-66 படத்தை பற்றிய செய்திகளையே மக்கள் மறந்து விட்டார்கள். இன்னும் சுவாரஸ்யமான தகவல் என்னவெனில் விஜயின் அடுத்த படமான தளபதி – 67 படத்தை லோகேஷ் தான் இயக்குகிறார் என தெரிந்தவுடன் தளபதி – 67 படத்தை பற்றிய அப்டேட்ஸ்க்கு ரசிகர்கள் தயாராகி விட்டனர்.

vijay3_cine

மேலும் தளபதி – 66 ஒரு கமெர்ஷியல் படமாக உருவாக இருப்பதால் அதன் மீதுள்ள ஆர்வம் குறைந்து விட்டதா? இல்லை லோகேஷின் மீதுள்ள ஆர்வம் கூடி விட்டதா? என விவாதங்கள் தற்போது இணையத்தில் நடந்து வருகின்றன. என்ன இருந்தாலும் தளபதி – 66 விட அடுத்த படத்தின் ஆர்வத்தை நோக்கி தான் ரசிகர்களின் கவனம் இருக்கிறது என்று அவர்கள் பகிரும் செய்திகளில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top