ஆட்டுக்கு ஒரு நியாயம்? மாட்டுக்கு ஒரு நியாயமா? மாட்டுக்கறி விவகாரத்தில் கருத்து கூறிய சசிகுமார் பட நடிகை!
சமீபகாலமாக நடிகைகள் பலரும் சர்ச்சையை ஏற்படுத்த கூடிய கருத்துக்களை கூறி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். இதை அவர்கள் விளம்பரத்திற்காக செய்கிறார்களா? அல்லது கருத்து கூற வேண்டும் என்பதற்காக கூறுகிறார்களா? என்று தெரியவில்லை.
அந்த வகையில் தற்போது மலையாள நடிகை ஒருவர் மாட்டுக்கறி விவகாரத்தில் கருத்து கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார். அந்த நடிகை வேறு யாருமல்ல கடந்த 2016ஆம் ஆண்டு தமிழில் சசிகுமார் நடிப்பில் வெளியான வெற்றிவேல் படம் மூலம் நாயகியாக அறிமுகமான நிகிலா விமல் தான்.
தொடர்ந்து கிடாரி போன்ற ஒரு சில படங்களில் நடித்த நிகிலா தற்போது மலையாளத்தில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நிகிலாவிடம் மாட்டை இறைச்சிக்காக வெட்டுவது சரியா என்ற கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த நிகிலா கூறியிருப்பதாவது, "நம்ம ஊரில் பசுவை வெட்டலாமா வெட்டக்கூடாதா என்ற விதிமுறை எல்லாம் இல்லை. பசுவை வெட்டக்கூடாது என்பது இப்போதுதான் பேசப்பட்டு வருகிறது. விலங்குகளை பாதுகாக்க வேண்டுமென்றால் அனைத்து விலங்குகளையும் தான் பாதுகாக்க வேண்டும்.
வெட்டக்கூடாது என்றால் எதையுமே வெட்டக்கூடாது. கோழி மற்றும் ஆடும் ஓர் உயிர் இல்லையா? ஆட்டுக்கு ஒரு நியாயம்? மாட்டுக்கு ஒரு நியாயமா? இதில் பசுவுக்கு மட்டும் சலுகை எதற்கு?. சாப்பிடலாம் என்றால் அனைத்தையும் சாப்பிடலாம். இல்லை என்றால் எதுவுமே சாப்பிடக் கூடாது" என கூறியுள்ளார். இது தற்போது மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.