இரட்டை குழந்தைகளுக்கு அம்மாவானார் நயன்!..புகைப்படத்தை வெளியிட்டு குதூகலித்த விக்கி!..

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக புதுசாக வலம் வருபவர்கள் நடிகை நயன்தாரா மற்றும் விக்கி. இவர்களது திருமணம் கடந்த ஜூன் மாதம் கோலாகலமாக மகாபலிபுரத்தில் நடைபெற்றது.
திருமணத்திற்கு ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணத்திற்கு பிறகு நடிப்பில் பிஸியாக இருந்தார் நயன்.
மேலும் இவருக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் பிரச்சினை இருக்கிறது என்றெல்லாம் வதந்திகள் வந்தன. மேலும் சில தினங்களுக்கு முன் குழந்தைக்காக சினிமாவில் நடிக்க வில்லை என்ற தகவலும் வெளியானது.
இந்த நிலையில் விக்கி தனது சோஷியல் மீடியாவில் இரட்டை ஆண்குழந்தைகளோடு நயனும் விக்கியும் இருக்கிற மாதிரியான புகைப்படத்தை பதிவிட்டு நானும் நயனும் அம்மா அப்பாவாக ஆகிவிட்டோம் என்றும் எங்களை அனைவரும் வாழ்த்துக்கள் என்றும் இனி இவர்கள் தன் எங்கள் உயிர், உலகம் என்றும் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் ஏதேனும் தத்தெடுத்துள்ளனரா? என்று புலம்பி வருகின்றனர்.