மிர்ச்சி சிவா மறுத்த படத்தில் நடித்தாரா விஜய் சேதுபதி? ரசிகர்கள் அதிர்ச்சி!
கோலிவுட்டில் மக்கள் செல்வனாக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் ஆரம்பத்தில் காமெடிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் தான் நடித்து வந்தார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட படங்களில் காமெடி தான் முதன்மையாக இருக்கும்.
அதே போல கடந்த 2015ஆம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முழுக்க முழுக்க காமெடியும் சற்று ஆக்சனும் கலந்த இந்த படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
பார்த்திபன், ராதிகா, ஆர். ஜே. பாலாஜி உள்ளிட்ட பலர் காமெடியில் அசத்தியிருந்த நானும் ரவுடி தான் படம் வசூல் ரீதியாக நல்ல வெற்றியை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி இப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது நடிகர் மிர்ச்சி சிவா தானாம். இந்த படத்தின் கதையை இயக்குனர் விக்னேஷ் சிவன் முதலில் நடிகர் மிர்ச்சி சிவாவிடம் தான் கூறியுள்ளார். ஆனால் சிவா இதனை நிராகரித்ததால், விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானாராம்.
இந்த தகவலை விருது விழா ஒன்றில் விக்னேஷ் சிவன் வெளிப்படையாக கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது. இருப்பினும் நானும் ரவுடி தான் படம் விஜய் சேதுபதிக்கு தான் பொருத்தமாக இருந்தது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இதூமாதிரி கதைகளை தேர்வு செய்தால் கூட விஜய் சேதுபதிக்கு ஓரளவிற்கு வெற்றி கிடைக்கும்.