Categories: Cinema News latest news tamil cinema gossips

விக்ரம் 3.! போலீஸ் ‘ரோலக்ஸ்’ சூர்யா.? வில்லன் கமல்.? காத்திருக்கும் பெரிய சர்ப்ரைஸ்.!

RRR, கே.ஜி.எப்-2 என பிற மொழி படங்கள் தமிழக திரையரங்கை ஆக்கிரமித்து பேய் ஹிட் அடித்த சமயம் தமிழில் அப்படி ஒரு பிரமாண்ட வெற்றி படம் வராதா என ரசிகர்கள் ஏங்கி போய் இருந்த நேரம் ஆபத்பாந்தவனாய் வந்த திரைப்படம் விக்ரம்.

Also Read

 

 

உலகநாயகன் கமல் நடிப்பில் , ஃபகத் பாசில், விஜய் சேதுபதி , சூர்யா என் பலர் மிரட்டியுள்ள திரைப்படம் விக்ரம். இது தான் ஒரிஜினல் ஃபேன் பாய் திரைப்படம்  என இயக்குனர்  லோகேஷ்  கனகராஜ் நிரூபித்து விட்டார்.

இறுதி காட்சியில் சூர்யா வெறித்தனமான இன்ட்ரோ கொடுத்து அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பை பன் மடங்கு அதிகரித்துவிட்டார். தற்போதே பலவாறு இந்த கதை பற்றி ரசிகர்கள் பேச ஆரம்பித்து விட்டனர்.

இதையும் படியுங்களேன் – மொத்தம் 3 டாப் ஹீரோயின்., 2 சூப்பர் ஸ்டார்ஸ்.! அனல் பறக்கும் தலைவர்169 அப்டேட்.!

அதில்,  ஓர் பிரபல சினிமா பத்திரிகை சேனல் ஒரு கதையை கூறியது, அதாவது, சூர்யா எப்படியும் கொடூர வில்லனாக நடித்திருக்க மாட்டார். அப்படி அவர் காட்டப்பட்டாலும், இறுதியில் தான் ஒரு போலீஸ் என கூற அதிக வாய்ப்புள்ளது. அதே போல கமல் அவரை எதிர்த்து தான் இருப்பார். அப்படி பார்த்தல் போலீசாக தான் ரோலக்ஸ் சூர்யா காட்டப்படுவார். கமல் அவருக்கு எதிரானவராக காட்டப்பட அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

Published by
Manikandan