முதன்முறையாக வில்லனாக நடிக்கும் சீயான் விக்ரம்.. அதுவும் இந்த மாஸ் இயக்குனர் படத்தில்!

பாகுபலி என்ற பிரமாண்ட படத்தின்மூலம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்கவைத்தவர் இயக்குனர் ராஜமௌலி. இப்படத்தின் வெற்றிக்குப் பின் எப்படியாவது ராஜமௌலியுடன் ஒரு படத்திலாவது இணைந்து பணியாற்ற வேண்டும் என அணைத்து ஹீரோக்களும் தவம் கிடக்கின்றனர்,
இந்நிலையில் இவர் தற்போது சுதீந்திரா போராட்ட வீரர்களின் கதையை மையமாகக்கொண்டு இயக்கியுள்ள படம் 'ஆர்.ஆர்.ஆர்'. இப்படத்தில் ஹீரோவாக ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் ஆகியோர் நடிக்கிறார்கள். இதில் நாயகியாக ஆலியா பட் நடித்துள்ளார்.
முன்னதாக ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் 'Student No.1', 'Simhadri', 'Yamadonga' என்ற மூன்று படங்களில் நடித்துள்ளார். ராம்சரணும் 'மகதீரா' என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த மூவரும் இணைந்துள்ளதால் இப்படத்திற்கு பெரிதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

magesh babu
இப்படம் ஜனவரி முதல் வாரத்தில் தியேட்டரில் வெளியாக உள்ளது. இப்படத்தை முடித்துவிட்டு ராஜமௌலி, தெலுங்கில் மகேஷ் பாபுவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம்.
மேலும் இப்படத்தில் வில்லனாக நடிக்க சீயான் விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாகவும் கூறப்படுகிறது. பொதுவாகவே ராஜமௌலி படங்களில் ஹீரோவை விட வில்லன் ரோலுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். எனவே விக்ரம் இப்படத்தில் கண்டிப்பாக நடிப்பார் என கூறப்படுகிறது.