பிரபல தனியார் தொலைக்காட்சி சீரியல்கள் மூலம் மிகவும் பிரபலமாக அறியப்பட்டவர் நடிகை ஷிவானி. அப்படி சீரியலில் நடித்து கொண்டிருக்கும் போதே, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு, இளைஞர்கள் மத்தியில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தார் ஸ்ரீவானி.

அந்த புகழ் அவரை பிக் பாஸ் வீட்டு பக்கம் கொண்டு சென்றது. அங்கு அவர் பெரிதாக தன்னை வெளிகொண்டு வரவில்லை என்றே பரவலாக கூறப்பட்டது. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகும், மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் கவர்ச்சி புகைப்பட வேலையை தொடங்கினார்.

அதன் பிறகுதான் விக்ரம் படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்தது. அதுவும் பெரிய வாய்ப்பு அல்ல. விஜய் சேதுபதிக்கு இருக்கும் மூன்று மனைவிகளில் ஒரு மனைவியாக ஷிவானி நடித்திருந்தார். பெரிதாக அவருக்கு காட்சிகள் வசனங்கள் கூட கிடையாது.
இதையும் படியுங்களேன் – விஜய் முகத்துல நடிப்பு வரல… அந்த சம்பவத்தை இன்னும் பாக்கல.! கழுவி ஊற்றிய பீஸ்ட் பிரபலம்.!
விக்ரம் எனும் பெரிய படத்தில் நடித்துள்ளதால், தனக்கு சின்ன சின்ன படங்களிலாவது ஹீரோயின் வேடம் வருமென்று மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தார் ஷிவானி.

ஆனால், தற்போது அவருக்கு ஏமாற்றமே கிடைத்து வருகிறதாம். எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும், அதில் கொஞ்சமாக நடித்த ஷிவானிக்கு கதாநாயகி வாய்ப்பு எதுவும் வரவில்லையாம். அப்படியே வந்தாலும் கவர்ச்சி காட்டும் வேடம்தான் வருகிறதாம். இதனால், ப்ளீஸ்.. அந்த மாதிரி என்னை நடிக்க சொல்லாதீர்கள். என்று தன்னை தேடி வரும் கவர்ச்சி வாய்ப்புகளுக்கு மறுப்பு தெரிவித்து வருகிறாராம் ஷிவானி.
