விக்ரமுக்கு இப்படி ஒரு சோதனையா?... ரசிகர்கள் அதிர்ச்சி..
கொரோனா வைரஸின் 2வது அலை இன்னும் முடியவில்லை. தமிழகத்தில் 750 பேர் தினமும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள், திரைத்துறை பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது கொரோனா 2வது கொஞ்சம் ஓய்ந்துள்ள நிலையில் ஓமைக்ரான் எனும் புதிய வைரஸ் மனிதர்களை தாக்க துவங்கியுள்ளது.
ஒரு பக்கமும் கொரோனா வைரஸாலும் சிலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரு வாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின் மீண்டார்.அதேபோல், நடிகர் அர்ஜூன் சமீபத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்டார்.
இந்நிலையில், நடிகர் சீயான் விக்ரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தி அவரின் ரசிகர்களையும், திரையுலகினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. எனவே, விரைவில் அவர் குணம் பெற்று திரும்ப வேண்டும் என அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.