Connect with us

விக்ரம் பட தழுவலா சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர்.? அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்..

Cinema News

விக்ரம் பட தழுவலா சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர்.? அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்..

தர்பார், அண்ணாத்த எனும் அடுத்தடுத்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், அடுத்த திரைப்படத்தை நல்ல வெற்றிப்படமாக , ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் எடுக்க வேண்டும் என ரஜினிகாந்த் தற்போது இளம் இயக்குனர்களுடன் அடுத்தடுத்து கூட்டணி வைத்துள்ளார்.

இதில் முதலில் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் ஜெயிலர் ஷூட்டிங் சிறை போல செட் அமைத்து சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட் பற்றி தகவல் வெளிவருகையில் இது விக்ரம் படத்தின் தழுவலா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர் .

இதையும் படியுங்களேன்  – சியான் விக்ரம் vs தளபதி விஜய்.! நேருக்கு நேர் மொத்தம் 7 முறை.! வெற்றி யார் பக்கம் தெரியுமா.?!

அதாவது, விக்ரம் படத்தில் ஜெயில் காட்சிகள் வரும் அதில் இருந்து ஹீரோவின் கூட்டாளிகள் தப்பிப்பது போலவும், கமல் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியாகவும் வருவார். இதிலேயும் அதே போல ரஜினி கதாபாத்திரம் ஓய்வுபெற்ற ஜெயிலர் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்களேன்  – அந்த விஷயத்தை மறைக்காத நயன்தாரா.. குழப்பத்தில் திரையுலகம்.! இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதோ.?!

அதே போல தற்போது வெளியான தகவலின் படி, இந்த படத்தில் குழந்தை நட்சத்திரம் ரித்து நடிக்கிறாராம். யூடியூப் வீடியோக்களில் கலக்கி, நயன்தாராவுடன் O2 திரைப்படத்தில் நடித்த சின்ன பையன் இதில் ரஜினியின் பேரனாக நடிக்கிறார்  கூறப்படுகிறது .  இந்த தகவலையும் ஒப்பிட்டு பலரும் விக்ரம் படத்தில் தழுவலா ஜெயிலர் என கேட்டு வருகின்றனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top