தயவுசெய்து எங்களை தனியா இருக்க விடுங்க..! விக்ரம் உடல் நிலை குறித்து மகன் உருக்கமான பதிவு....

by Rohini |
Vikram_main_cine
X

தமிழ் சினிமாவின் சிகரம் தொடும் நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். நேற்று இவர் மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் நடித்திருக்கும் பிரம்மாண்டமான காவிய படமான பொன்னியின் செல்வன் படத்தின் டீஸர் வெளியானது. அந்த டீஸர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த அத்தனை சக நடிகர்களும் கலந்து கொண்டனர்.

vikram1_cine

நடிகர் விக்ரமும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென நேற்று அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக பரபரப்பான தகவல் வெளிவந்தது. மேலும் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக இணையத்தில் செய்திகள் பரவியது.

vikram2_cine

நேரம் போக போக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக பல வதந்திகளும் பரவியது. இந்த வதந்திகளை எல்லாம் கவனித்த நடிகர் விக்ரமின் மகனும் நடிகருமாகிய நடிகர் துருவ் விக்ரம் ஒரு போஸ்ட் ஒன்றை தனது இண்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

vikram3_cine

அதில் அவர் கூறியதாவது: என் அப்பா நலமுடன் இருக்கிறார். மேலும் அவருக்கு மாரடைப்பு என்னும் வதந்தி செய்திகளை நம்ப வேண்டாம். ஒரு வித அசௌகரியமான பிரச்சினை காரணமாக தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த நேரத்தில் எங்களுக்கான தனியுரிமை அவசியமாகிறது. இன்னும் ஒரு நாளில் வீடு திரும்புவார் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Next Story