
Cinema News
விக்ரம் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி, விஜய், சூர்யா.!? ஆண்டவர் மாஸ் சும்மா தெறிக்க போகுது.!
தமிழ் சினிமாவில் ஏற்கனவே எதிர்பார்த்த காத்திருந்த திரைப்படங்கள் அனைத்தும் வெளியாகி விட்டன. விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் படங்கள் வரை எதிர்பார்த்த அனைத்தும் வெளியாகிவிட்டன. தற்போது அனைவரின் கவனமும் கமலின் விக்ரம் படம் மீது தான் இருக்கிறது.
விக்ரம் படம் ஜூன் 3ஆம் தேதி வெளியாக உள்ளது. நாளுக்கு நாள் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகும் வண்ணம் படக்குழு போஸ்டர், பாடல்கள், தகவல்கள் என வெளியிட்டு எதிர்பார்ப்பை எகிற வைத்து வருகின்றன.
விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் ஞாயிற்று கிழமை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த இசைவெளியீட்டு விழா சம்பந்தமாக பல்வேறு செய்திகள் வெளியாகி கொண்டே இருக்கின்றன.
இதையும் படியுங்களேன் – டான் படத்தில் இதை கவனித்தீர்களா.?! ரஜினியின் முரட்டு பக்தன் சிவகார்த்திகேயன் தான்.! இதுவரை மூன்று.!
அதில் முக்கியமாக இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு தமிழ் சினிமா முன்னணி நட்சத்திரங்களான ரஜினி, விஜய், சூர்யா என பல்வேறு முக்கிய பிரபலங்களுக்கு கமல் தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட உள்ளதாம். விரைவில் இந்த விழாவிற்கு யார் யார் வர உள்ளனர் என்கிற விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கண்ட எந்த நடிகர்கள் வருவார்கள் என உறுதியாக தெரியவில்லை. ஆனால், நிச்சயம் கமல் நடித்துள்ள விக்ரம் பட இசைவெளியீட்டு விழா பேசுபொருளாவது உறுதி.