Connect with us
banner

’சாமி’ நடிகரை லாக் டவுனில் புரட்டி போட்ட சம்பவம்…! விரக்தியில் எடுத்த திடீர் முடிவு…

vikram_main_cine

Cinema News

’சாமி’ நடிகரை லாக் டவுனில் புரட்டி போட்ட சம்பவம்…! விரக்தியில் எடுத்த திடீர் முடிவு…

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் தனது வித்தியாசமான தோற்றத்தால் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். சேது படத்தின் மூலம் சினிமாவில் ரீஎன்ரி கொடுத்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்.

vikram1_cine

ஆரம்பகாலங்களில் பல தோல்விகளை தழுவினாலும் பாலாவின் இயக்கத்தில் சேது படத்தின் மூலம் தான் ஒரு கம்பேக் கொடுத்தார் விக்ரம். அதை தொடர்ந்து பிதாமகன், சாமி, தூள், கந்தசாமி, போன்ற வித்தியாசமான கதைகளம் கொண்ட படங்களோடு வித்தியாசமான தோற்றத்தில் நடித்து பிரமிக்க வைத்தார்.

vikram2_cine

இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக கொரானா சமயத்தில் சினிமா பிரபலங்கள் பலரும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வந்த நிலையில் நடிகர் விக்ரமும் அதே மன நிலையில் தான் இருந்தாராம். சில சமயங்களில் தூக்கமே வராமல் தவித்துக் கொண்டும் இருந்தாராம்.

vikram3_cine

அந்த சமயத்தில் தான் ஒரு ஷார்ட் ஃபிலிம் எடுக்கலாம் என முடிவு எடுத்ததாக கூறினார். அதுவும் தனது மகன் துருவ் உடன் இணைந்து படம் எடுக்கலாம் என நினைத்து மணிரத்னத்திடம் போன் பண்ணி யோசனைகள் எல்லாம் கேட்டதாக விக்ரம் கூறினார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top