அண்ணன பேசாம மாறுவேடப் போட்டிக்கு அனுப்பலாம்! அசத்தலான கெட்டப்பில் விக்ரம் கலக்கிய திரைப்படங்கள்
கோலிவுட்டில் கெட்டப் மன்னன் என்று அனைவராலும் விமர்சனம் செய்யப்படும் நடிகர் சீயான் விக்ரம். இன்று சினிமாவில் ஒரு மாபெரும் இடத்தை அடைந்திருக்கிறார் என்றால் நடிப்பின் மீதும் சினிமாவின் மீதும் அவருக்கு இருக்கும் ஆர்வமே காரணம். ஆரம்ப காலத்தில் வெறும் தோல்விகளே பார்த்து வந்த விக்ரமுக்கு நடிப்பு தீனியாக போட்ட படம் சேது. அந்தப் படத்தில் மொட்டை தலையுடன் வித்தியாசமான கெட்டப்பில் கிளைமாக்ஸில் வந்து அசத்தியிருப்பார். அந்தப் படம் தான் அவருக்கு ஒரு ஆரம்ப விதையை போட்ட படமாக அமைந்தது. வகையில் தன்னுடைய வித்தியாசமான கெட்டப்புகளால் ரசிகர்களை அசரவைத்த திரைப்படம் போது நாம் பார்க்க இருக்கிறோம்.
பிதாமகன் : இயக்குனர் பாலா இயக்கத்தில் விக்ரமும் சூர்யாவும் இணைந்து நடித்த திரைப்படம் பிதாமகன். அந்தப் படத்தில் ஒரு சித்தன் மாதிரியான தோற்றத்தில் நடித்திருப்பார் விக்ரம். மேலும் வசனங்கள் எதுவும் இல்லாமல் தன்னுடைய கத்தல்களாலும் , பாவனைகளாலும் தான் நினைத்ததை கூறும் கதாபாத்திரமாக அந்த படத்தில் நடித்திருப்பார். அந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று தந்தது.
அந்நியன் : சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த முதல் படம் அன்னியன். இந்த படத்தில் அந்நியனாகவும் அம்பியாகவும் ரெமோவாகவும் மூன்று கதாபாத்திரங்களில் வெவ்வேறு கெட்டப்புகளில் நடித்திருப்பார். மேலும் ஒரு குறிப்பிட்ட காட்சியில் ஒரே நேரத்தில் மூன்று விதமான கதாபாத்திரமாக மாறி அனைவரையும் மிரள வைத்திருப்பார். இந்தப் படமும் விக்ரமுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது.
ஐ : இதுதான் விக்ரமின் வாழ்க்கையில் மிகப் பெரிய ஹைப்பை ஏற்படுத்திய படமாக அமைந்தது. இந்தப் படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சிகளுக்குப் பிறகு கூன் வளைந்த முதுகோடு பொக்கலங்கள் நிறைந்த உடலோடு விக்ரம் தோன்றும் காட்சி பார்க்கும் ரசிகர்களை கண்கலங்க வைத்தது. மிகப்பெரிய பொருள் செலவோடு எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் சரி பிரபலங்கள் மத்தியிலும் சரி ஒரு நிலையான இடத்தை பிடித்தது.
இருமுகன் : இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை தராவிட்டாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான படமாக அமைந்தது. அதுவும் ஒரு கேரக்டரில் விக்ரம் திருநங்கை போன்ற தோற்றத்தில் மிகவும் ஸ்டைலாக பேசி நடித்திருக்கும் காட்சி பார்க்கும் அனைவரையும் கண்ணிமைக்காமல் பார்க்க வைத்தது. அவர் நடக்கும் விதம் பேசும் தோரணை என அனைத்தும் பெண்ணின் குணாதிசயங்களை அப்படியே காட்டியது.
இதையும் படிங்க :பெரிய ஹீரோ செய்யுற காரியமா இது!.. நண்பன் காதலை உள்ளே புகுந்து கெடுத்த அசோக் செல்வன்…
தங்கலான் : பா ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும் தங்கலான் திரைப்படத்தில் ஒரு காட்டுவாசியை போல் நடித்திருக்கிறார் விக்ரம். இந்தப் படத்திற்காக மேக்கப்பிற்கே பல மணி நேரம் எடுத்துக் கொள்கிறாராம் விக்ரம் முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்த நிலையில் இன்னும் 10 நாட்கள் மட்டும் படப்பிடிப்பு இருக்கின்றதா அனைத்து தரப்பினரிடையும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கும் இந்த படத்தின் கதைக்காவும் விக்ரமின் கெட்டப்பிற்காகவும் படத்தை ஆஸ்கார் வரை கொண்டு செல்ல முயற்சித்து வருகிறார்களாம்.