Connect with us

கோப்ராவில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள்…! படக்குழு அறிவித்த புதிய அறிவிப்பு…

cobra_main_cine

Cinema News

கோப்ராவில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள்…! படக்குழு அறிவித்த புதிய அறிவிப்பு…

விக்ரம் நடிப்பில் நேற்று தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்ட கோப்ரா திரைப்படம் ரசிகர்களின் ஆரவாரத்திற்கும் சங்கடத்திற்கும் உள்ளானது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர்.ரகுமான் இசையில் விக்ரம் நடிப்பில் மூன்று வருடங்களுக்கு பிறகு வெளிவந்த திரைப்படம் தான் கோப்ரா.

cobra1_cine

இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி நடித்திருக்கிறார். மேலும் மிருனாளினி, மீனாட்சி போன்ற பலரும் நடித்திருக்கின்றனர். மிகுந்த ஆரவாரத்துடன் வெளியிடப்பட்ட கோப்ரா திரைப்படம் முக்கால் வாசி ரசிகர்களை ஏமாற்றியது என்றே கூற வேண்டும். படம் பார்த்த பலரும் எதிர்மறையான கருத்துக்களையே கூறினார்.

cobra2_cine

இதையும் படிங்கள் : குருபக்தியில ரஜினி, கமலையெல்லம் மிஞ்சிடுவார் போல வி.சே!…வியப்பூட்டிய புதிய தகவல்!…

மேலும் விக்ரமை வைச்சு செஞ்சுட்டாங்க என விக்ரம் ரசிகர்கள் மனம் நொந்து பேசியதை பல மீடியாக்களில் பார்த்திருப்போம். இன்னும் சற்று அதிகமாக 3 மணி நேரம் படம் ரொம்ப நீளமாக இருக்கிறது. தூக்கம் தான் வந்தது என்றே முக்கால் வாசி ரசிகர்கள் கூறி வந்தனர்.

cobra3_cine

இதையும் படிங்கள் : மீண்டும் விஜய் ரூட்டுக்கு தாவிய விஷால்.! வெளியான புது போஸ்டரால் குழப்பத்தில் ரசிகர்கள்.!

இதை கருத்தில் கொண்ட கோப்ரா படக்குழு இன்று ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதாவது ரசிகர்களின் மகிழ்ச்சி, நேரம், பணம் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு தான் கோப்ரா படத்தில் இருந்து 20 நிமிட காட்சிகளை டிரிம் பண்ணியிருக்கிறோம். இன்று மாலையில் இருந்து டிரிம் பண்ண கோப்ரா படத்தை திரையரங்குகளில் கண்டு களியுங்கள் என டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top