தேடிப்போய் சூனியம் வைத்துகொள்ளும் சியான் விக்ரம்!.. அட்டர் பிளாப் கொடுத்தும் அடங்கலயே!..

by சிவா |   ( Updated:2023-12-06 06:35:40  )
vikram
X

சினிமாவில் பல வருடங்கள் போராடி சேது திரைப்படம் மூலம் தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் விக்ரம். தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பில்லாமல் பிரபுதேவா, அப்பாஸ் போன்ற நடிகர்களுக்கு டப்பிங் கொடுத்து வந்தார். மலையாள சினிமா பக்கம் சென்று ஹீரோக்களின் தம்பியாக பல படங்களில் நடித்தார்.

அதன்பின்னர்தான் பாலாவுடன் இணைந்து சேது படத்தில் நடித்தார். அந்த பட வெற்றிக்கு பின் தில், தூள், விக்ரம் என அதிரடி காட்டி தொடர் வெற்றிகளை கொடுத்து முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார். கடந்த 20 வருடங்களாக பல திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியிலும், திரையுலகிலும் ஒரு நிரந்த இடத்தை பிடித்துவிட்டார்.

இதையும் படிங்க: கனவுக்கன்னி சில்க் ஸ்மிதா இவ்வளவு உதவிகள் செய்திருக்காரா?!.. அட ஆச்சர்யமா இருக்கே..

காசி, அந்நியன், பிதாமகன், ஐ என தோற்றத்தில் வித்தியாசம் காட்டி ரசிகர்களை அசரவைத்தவர் விக்ரம். இப்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திலும் இவர் ஏற்றிருக்கும் வேடமும், அவரின் தோற்றமும் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்திற்காக கண்டிப்பாக விக்ரம் தேசிய விருதை பெறுவார் என சொல்லப்படுகிறது. சுதந்திரகாலகட்டத்திற்கு முன்பு கர்நாடக தங்க சுரங்கத்திற்கு அருகே வசிக்கும் தமிழர்களை வெள்ளையர்கள் விரட்ட நினைக்கும்போது அதை எதிர்த்து போராடும் கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: தம்பிக்காக காத்திருக்கும் தளபதி!.. ஆனா அட்லியோட பிளானே வேற!.. இப்படி ஆகிப்போச்சே!..

இந்நிலையில், அஜய் ஞானமுத்துவுடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க விக்ரம் முடிவெடுத்துள்ளாராம். அவரது இயக்கத்தில் விக்ரம் நடித்து ஏற்கனவே வெளியான கோப்ரா படம் வெற்றியை பெறவில்லை. ஆனாலும், அஜய் ஞானமுத்துவின் ஸ்டைல் அவருக்கு பிடித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

cobra

அஜய் ஞானமுத்து இப்போது டிமாண்டி காலனி 2 படத்தை இயக்கி வருகிறார். அதன்பின் ஹிந்தியில் அஜய் தேவ்கானை வைத்து ஒரு படமெடுக்க திட்டமிட்டிருக்கிறார். அந்த படம் முடிந்தபின் விக்ரம் நடிக்கும் படத்தை அவர் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story