போரடிய போது வாய்ப்பு கொடுத்த நடிகர்.. ஆனாலும் மறுத்த சீயான்!.. ஏன் தெரியுமா?!..

Published on: February 11, 2023
vikram
---Advertisement---

தமிழ் சினிமாவில் போராடி மேலே வந்த நடிகர்களில் நடிகர் விக்ரம் முக்கியமானவர். சேது படம் மூலம் இவரின் வாழ்க்கை மாறினாலும் அதற்கு முன்பு அவர் நடித்த திரைப்படங்கள் கவனத்தை பெறவில்லை. அரவிந்த்சாமி போல் டீசண்டான வேடங்களே கிடைத்தது. ஒருகட்டத்தில் மலையாளத்தில் கதாநாயகர்களின் தம்பியாக கூட பல திரைப்படங்களில் நடித்தார். அஜித்துடன் உல்லாசம் படத்தில் நடித்தும் கூட அவருக்கு நல்ல வாய்ப்புகள் வரவில்லை.

vikram
vikram

அப்போது பல நடிகர்களுக்கு சென்ற ஒரு கதை விக்ரமை தேடி வந்தது. அப்படி அவர் நடித்த திரைப்படம்தான் சேது. பாலாவின் முதல் படமான இப்படம் மூலம் விக்ரம், பாலா என இருவரும் பிரபலமானார்கள். அதன்பின் விக்ரம் வெற்றியின் உச்சிக்கு சென்றார். ஒருபக்கம் ஜனரஞ்சகமான படங்களிலும், ஒரு பக்கம் நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கும் நல்ல கதைகளிலும் நடித்து வருகிறார்.

sethu
sethu

ஆனால், சேதுபடத்தில் அவர் நடிப்பதற்கு முன்பே அவருக்கு நடிகர் விவேக் நல்ல நண்பராக இருந்தார். சேதுபடத்தில் விக்ரம் நடித்து கொண்டிருந்த போது அவரை தொடர்புகொண்ட விவேக் ‘நான் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன்.

Vivek
Vivek

அதில் இரண்டு கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உண்டு. ஒன்றில் நான் நடிக்கிறேன். மற்றொன்றில் நீ நடிக்கிறாயா? நான் தயாரிப்பாளரிடம் பேசட்டுமா?’ எனக்கேட்டாராம். அதற்கு விக்ரம் ‘இல்லடா இப்ப சேது படத்தில் நடித்து வருகிறேன். இந்த படம் மீது எனக்கு நம்பிக்கை இருக்கு. இப்படத்திற்கு பின் நானும் ஒரு வெற்றிப்பட ஹீரோவாக மாறுவேன்’ என சொன்னாராம்.

அவர் கூறியது போலவே அப்படத்திற்கு பின் தில், தூள், சாமி ஆகிய படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக மாறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: எஸ்.பி.பியும் இளையராஜாவும் செய்யாத ஒரு சாதனை.. ஐயோ ஒன்னு கூட வாங்கலையா..?

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.