கொஞ்சம் மிஸ் ஆகிருந்தா கோமாவுக்கு போயிருப்பாரு.. ரிஸ்க் எடுத்த சியான் விக்ரம்...

vikram
தமிழ் சினிமாவில் ஒரு உன்னத படைப்பு என்று சொன்னால் அது நடிகர் விக்ரமை தான் குறிக்கும். சினிமாவிற்காக தன்னை எந்த அளவுக்கு வருத்தனுமே அந்த அளவுக்கு தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து நடிக்க கூடிய மகா நடிகர் விக்ரம்.

vikram1
ஆரம்பகாலங்களில் ஏகப்பட்ட இடையூறுகளை கடந்து சினிமாவில் இன்று ஒரு முன்னனி நடிகராக இருக்கிறார் என்றால் அதற்கு முழுக் காரணம் அவரின் தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் மட்டுமே காரணமாகும். படங்கள் சரிவர வராத நேரத்திலும் சினிமாவில் ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக டப்பிங் பேசுவதில் ஆர்வம் காட்டினார்.
இதையும் படிங்க : படப்பிடிப்பில் நடந்த விபரீதம்!.. சரோஜாதேவியை திடீரென தள்ளிவிட்ட எம்.ஜி.ஆர்.. நடந்தது இதுதான்!..
அதன் பின் தான் சேது படம் கைகொடுத்தது. தொடர்ந்து பல ஆக்ஷன் படங்களில் நடித்து தன்னை ஒரு முழு நடிகனாக காண்பித்தார். இடையிடையே சில ஃப்ளாப் படங்களும் கொடுத்தார். ஆனாலும் தளராது தொடர்ந்து தன் முயற்சிகளை கையில் எடுத்தார்.

vikram3
அதன் விளைவு தான் இயக்குனர் சங்கருடன் இணைந்து அந்நியன் படம் வெளியாகி விக்ரமை உலகம் அறியச் செய்தது. அதுவரை இந்தியா முழுவதும் தெரிந்த விக்ரமை உலகம் முழுவதும் அறியச் செய்தார் சங்கர். இந்த கூட்டணியின் வெற்றி மீண்டும் ஐ படத்திலும் தொடர்ந்தது.
ஐ படத்தில் அதுவரை இல்லாத அளவுக்கு தன் உடம்பை மிகவும் வருத்தி நடித்தார். எந்த அளவுக்கு விக்ரமை பயன்படுத்த வேண்டுமோ அந்த அளவுக்கு விக்ரமை இந்த படத்தில் மிக நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார் சங்கர். ஒரு சமயத்தில் இவரின் உடல் நிலையை கருதி கூடவே மருத்துவர்களின் ஆலோசனைகளையும் பெற்றிருக்கிறாராம் விக்ரம்.

vikram4
மருத்துவர்களும் இது அதிகமானால் கோமா நிலைக்கே போகும் வாய்ப்பிருக்கிறது என்று கூறியும் அதற்கு விக்ரம் என்னை இந்த அளவுக்கு ஊரறிய செய்த சங்கருக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்யத் தயார் என்று ஐ படத்தில் மிகவும் துணிச்சலாக நடித்தாராம் விக்ரம். இந்த சுவாரஸ்ய தகவலை பத்திரிக்கையாளர் செய்யாறுபாலு கூறினார்.