அந்த ஒரு விஷயத்தில மணி சார் என்னை ஏமாத்திட்டாரு...! மும்பையில காலவாரி விட்ட நடிகர் விக்ரம்...
தமிழ் சினிமாவின் பெருமையை நிலை நாட்ட உலகம் முழுவதும் எதிர்பார்க்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன் வருகிற 30 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.இன்னும் 3 நாள்களே உள்ள நிலையில் படத்தில் நடித்த பிரபலங்கள் பலரும் படத்திற்கான புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.
இது ஒரு அழகிய சுற்றுலா போலவே நடித்த பிரபலங்கள் எண்ணுகின்றனர். அந்த வகையில் நேற்று மும்பையில் நடந்த பிரஸ் மீட்டில் நடிகர் ஜெயம் ரவி, ஏஆர்.ரகுமான், நடிகர் விக்ரம், இயக்குனர் மணிரத்னம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது பேசிய நடிகர் விக்ரம் தன் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார்.
இதையும் படிங்கள் : எனக்கு தான் வேணும்…சூர்யாவுடன் சண்டையிட்ட கார்த்தி… கசிந்த தகவல்
அதாவது மணிரத்னம், சங்கர் சாரோட படத்துல நடிச்சுட்டு ரிட்டையர்டு ஆகிரனும் நினைச்சுட்டு இருந்தேன். சங்கர் சார் படத்துல நடிச்சுட்டேன். மணி சாரோட இது எனக்கு இரண்டாவது படம். அவர் படத்துல நடிக்கிறதுக்கு முன்னாடி மாதவனை பைக்-ல என்ரி சீன் கொடுத்து மேடி, மேடினு எப்படி கூப்பிட வைத்தாரோ அதே போல என்னையும் விக்கி, விக்கினு கூப்பிட வைப்பாருனு கனவுல இருந்தேன். ஏனெனில் அலைபாயுதே படத்தில் ஏற்கெனவே விக்ரமிற்கு ஒரு சின்ன ரோலில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதை நிராகரித்து விட்டார். இதை தற்சமயன் நினைவு படுத்தி கூறியிருக்கிறார். மேலும் கூறிய விக்ரம்,
ஆனால் ஒரு காட்டுக்குள்ள உட்கார வைச்சு ராவணன் படத்தை கொடுத்து ஏமாத்திட்டாரு. சரி இன்னொரு வாய்ப்பும் கிடைக்கும் என எதிர்பார்த்துட்டு இருந்த சமயத்தில இந்த படத்துக்காக கூப்பிட்டு நீ ஒரு அரசன் -னு சொல்லி நடிக்க வைச்சுட்டாரு என்று கேலிக்கையாக கூறினார். ஆனாலும் இந்த படத்தின் டிரெய்லர் என்னோட என்ரி சீனோட தான் ஆரம்பிக்குது. அதை நினைக்கும் போது எனக்கு பெருமையாக இருக்கிறது என்று கூறினார்.