வாய்ப்புக்காக ஏங்கிய விக்ரமா இப்டி? அம்மாவுடன் சென்று தயாரிப்பாளரிடம் சண்டை போட்ட சம்பவம்!..

Published on: September 27, 2023
---Advertisement---

Vikram: தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் போராடி ஒரு இடத்தினை பிடித்தவர் நடிகர் விக்ரம். இவர் தன்னுடைய ஒரு படத்தின் தயாரிப்பாளரிடம் வெற்றி பெற்ற சூழலில் கூட  அம்மாவுடன் சண்டைக்கு போனதாக கூறப்படுகிறது.

உடலை குறைத்து மனநலம் பாதிக்கப்பட்டவராக விக்ரம் நடித்து வெளியான படம் சேது. இப்படத்தினை பாலா இயக்கி இருந்தார். படத்தினை கந்தசாமி என்பவர் தயாரித்தார். விக்ரமின் கேரியரில் மிகப்பெரிய வெற்றி படமாக சேது அமைந்தது. தேசிய விருதும் பெற்றது.

இதையும் படிங்க: இவனுங்கள வச்சு அரசியல் பண்ணா விளங்கும்! தன் கைய வச்சே கண்ண குத்திக்கிற கதையா மாறிப்போன விஜய்

ஆனால் இந்த படத்தில் தயாரிப்பாளர் கந்தசாமிக்கு ஒரு கசப்பான அனுபவம் இருக்கிறதாம். அதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டியில், அந்த படத்தில் எந்த இடத்திலும் நான் தலையிடவே இல்லை. பாலா கதை அவர் இயக்கினார்.

சேது படத்துக்காக கலைஞர் கருணாநிதியிடம் விருது வாங்கினேன். அதுவே எனக்கு உயர்ந்தது. 40 விருது வரை கொடுத்தது. அமிதாப் பச்சன் படம் பார்க்க வந்தார். ஒரே படத்தில் எனக்கு இத்தனை பெருமை கிடைத்தது மிகப்பெரிய சந்தோஷத்தினை தந்தது. விக்ரம் படம் எடுக்கும் வரை ரொம்ப சக்கரையாக பேசினார்.

இதையும் படிங்க: செகன்ட் பார்ட்டே தேறுமான்னு தெரியல!. அதுக்குள்ள 3வது பார்ட்டா?!.. அதுவும் அந்த நடிகரா?!…

 பட ரிலீஸ் சமயத்தில் உதவி இயக்குனராக இருந்த சசி விக்ரமிடம் 1 லட்சம் வாங்கி போஸ்டர் அடித்து படத்துக்கு ப்ரோமோஷன் செய்து இருக்கிறார். இது எனக்கு தெரியாமல் இருந்தது. நான் செய்தித்தாள் விளம்பரங்களை மட்டுமே பார்த்தேன். இந்த சமயத்தில் விக்ரமும், அவர் அம்மா என் அலுவலகத்துக்கு வந்தார்கள்.

ஒரு லட்சம் வேண்டும் எனக் கேட்டனர். நான் எனக்கு தெரியாதே எனக் கூறினேன். ஆனால், விக்ரம் அதில் ரொம்பவே பிடிவாதமாக இருந்தார். ஒரு கட்டத்தில் நானே அந்த காசை கொடுத்துவிட்டேன். உடனே வாங்கிக்கொண்டு சென்று விட்டார். அதோட அவருடன் படம் பண்ணும் ஆசையே எனக்கு விட்டுவிட்டதாக குறிப்பிட்டு இருக்கிறார்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.