கைதி, மாஸ்டர் படங்களை இயக்கி ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்ட பலரும் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல சின்னத்திரை நடிகையும், பிக்பாஸ் போட்டியாளருமான நடிகை ஷிவானி நாராயணன் மற்றும் ‘மைனா’ நந்தினி ஆகியோர் நடித்து வருகின்றனர். மற்றொரு சின்னத்திரை நடிகையும், பிரபல தொகுப்பாளினியுமான மகேஷ்வரியும் விக்ரம் படத்தில் இணைந்துள்ளார்.
இதில் கமல் மற்றும் பகத் பாசிலுக்கு ஜோடியாக யார் நடிக்கிறார்கள் என்பதுபற்றி ஏதும் தெரியவில்லை. அவர்களுக்கு ஜோடி இல்லை எனக்கூறப்படுகிறது. மாஸ்டர் படத்தின் பாடல்கள் அனைத்தும் வெற்றி பெற்றதால் இப்படத்திற்கும் அனிருத்தே இசையமைத்து வருகிறார்.
ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக கமலே இப்படத்தை தயாரிக்கிறார். கடந்த ஆண்டு நவம்பர் 7ம் தேதி கமல் பிறந்தநாளன்று இப்படத்தின் அறிவிப்பு வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நாளை கமல்ஹாசனின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு பரிசு கொடுக்கும் விதமாக இப்படத்தின் சில காட்சிகளை லோகேஷ் கனகராஜ் First Glance வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் கதாநாயகனாக வருகிறார். இவர் தவிர நடிகர்கள் விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோரும் இப்படத்தில் இணைந்துள்ளதால் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்பட்டுள்ளது.
Ajithkumar: தமிழ்…
விடாமுயற்சி திரைப்படத்திற்கு…
Maharaja: தமிழ்…
நடிகர் நாகார்ஜுனா…
Nayanthara: நடிகை…