தொடர் தோல்வி.. பல கோடி சம்பளம் கேட்கும் விக்ரம்.. இதென்னப்பா நியாயம்?..

by Rohini |
vikram
X

vikram

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். தொடர் படங்களை கொடுத்தாலும் அவரால் இன்னும் அஜித், விஜய் இடங்களை தொட முடியாமல் இருக்கிறார். கிட்டத்தட்ட அஜித், விஜய்க்கு நிகரான நடிகர் என்றே கூறலாம். அவர்களை தாண்டியும் விதவிதமான கெட்டப்களில் நடித்து அசத்தக் கூடிய அசாத்திய நடிகர் தான் விக்ரம்.

தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். வரும் ஏப்ரலில் படப்பிடிப்புகள் முடிந்து ஆகஸ்ட் மாதத்திற்குள் திரையில் வெளியிட படக்குழு மும்முரமாக படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். ஒரு புறம் ‘துருவ நட்சத்திரம்’ படம் ரிலீஸாக காத்துக் கொண்டிருக்கின்றது.

vikram1

vikram1

டப்பிங் வேலைகள் இருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தப் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட துருவ நட்சத்திரம் இப்பொழுது தான் செல்ஃப் எடுத்திருக்கிறது.

இந்த நிலையில் 14 கோடியாக இருந்த தனது சம்பளத்தை தங்கலான் படத்திற்காக 22 கோடி வரை சம்பளமாக பெற்றிருக்கிறாராம். மகான் படத்திற்கு தான் 14 கோடி சம்பளம் வாங்கியிருந்தார். ஆனால் அந்தப் படமும் எதிர்பார்த்த அளவை போகவில்லை.

vikram2

vikram2

அதனை அடுத்து வெளியான கோப்ரா படமும் எந்த அளவு விமர்சனத்தை சந்தித்தது என்று அனைவரும் அறிந்த ஒன்று. அப்படி இருக்கும் போது எப்படி இந்த மாதிரி சம்பளத்தை ஏற்ற முடியும் என்று புலம்பி வருகின்றனர். இதற்கிடையில் அடுத்து தான் நடிக்கும் படத்திற்கு 30 கோடி வரை சம்பளத்தை அதிகரித்திருக்கிறாராம் விக்ரம்.

இதையும் படிங்க : நீச்சல் உடையில் ஊர்வசி… தயவு செஞ்சு அப்படி பண்ணிடாதீங்க!… தயாரிப்பாளரிடம் கெஞ்சிய சம்பவம்…

Next Story