19 கோடியில் இருந்து 50 கோடியா?.. விக்ரம் செய்த அட்டூழியம் - புலம்பும் இயக்குனர்

by Rohini |   ( Updated:2023-09-25 15:26:15  )
vikram
X

vikram

Mahavir Karna : கோலிவுட்டில் ஒரு மகா நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். தனது விதவிதமான கெட்டப்களால் ரசிகர்களை பிரமிக்க வைக்கிறார். ஒவ்வொரு படங்களிலும் ஏதாவது ஒரு புதுமையான கெட்டப்பை போட்டுக்கொண்டு ஆச்சரியப்படுத்தி வருகிறார்.

தங்கலான் திரைப்படத்தில் அவரின் கெட்டப்தான் மிகப்பெரிய ஆச்சரியத்தை தந்தது. மிக நீளமான முடி, மூக்குத்தி ம் கரு நிறம் கொண்ட உடல் என பார்க்க ஒரு அகோரியை போலவே இருந்தார். ஆனால் அந்த கெட்டப்பிற்கு ஆயிடம் அர்த்தங்கள் உண்டு என்பதை படம் ரிலீஸ் ஆகும் போது தெரிந்து கொள்ள முடியும்.

இதையும் படிங்க: காளையுடன் சண்டை போடுவார்னு பாத்தா? சூர்யாவை ப்ளே ஸ்டேசனில் தள்ளிவிட்டு வேடிக்கை காட்டும் சிறுத்தை சிவா

இந்த நிலையில் நேற்று திடீரென விக்ரமின் நடிப்பில் மகாவீர் கர்ணா என்ற பெயரில் ஒரு படத்தின் போஸ்டர் வெளியானது. எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி இப்படி ஒரு போஸ்டர் வெளியானது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அந்தப் படம் 2019 ஆம் ஆண்டே தொடங்க இருந்த படமாம்.

ஆர்.எஸ்.விமல்தான் இந்தப் படத்தின் இயக்குனராம். அப்போது இந்தப் படத்திற்காக விக்ரமுக்கு பேசப்பட்ட சம்பளம் 19 கோடியாம். ஆனால் அதன் பிறகு விக்ரம் ஏகப்பட்ட படங்களில் கமிட் ஆக மகாவீர் கர்ணா படம் கிடப்பிலேயே போடப்பட்டது.

இதையும் படிங்க: கமலுக்கே அல்வா கொடுக்க நினைத்த இயக்குனர்! விஷயம் தெரிஞ்சி வாழ்நாள் தண்டனையை கொடுத்த ஆண்டவர்..

4 வருடங்களை கடந்து விட்டது. இப்போதாவது படத்தை பற்றி பேசுவோம் என்று விக்ரமிடம் சென்றால் 50 கோடி வரை சம்பளம் கேட்கிறாராம். அதனால் விக்ரமின் சம்பளத்தை கேட்ட அந்தப் படத்தின் தயாரிப்பாளர் இந்தப் படமே வேண்டாம் என்று விலகிவிட்டாராம். அதன் பிறகு லைக்கா நிறுவனத்திடம் சென்றிருக்கிறார்கள்.

ஏற்கனவே லைக்கா நிறுவனம் பொன்னியின் செல்வனுக்காக பல கோடி பணத்தை முதலீடு செய்திருக்கிறது. மீண்டும் இந்தப் படத்திற்கு ஒரு VFX வேலை மற்றும் விக்ரமின் 50 கோடி சம்பளம் என அவர்களும் கைவிரித்து விட்டார்களாம்.

இதையும் படிங்க: ஒன்னா களமிறங்கும் தல தளபதி… யாரும் சண்டை மட்டும் போட கூடாதுப்பா…

இதை கேட்ட விக்ரம் ராஜ்கமல் நிறுனத்திடம் இருந்து எனக்கு வாய்ப்பு வந்து கொண்டே இருக்கிறது. வேண்டுமென்றால் அந்த நிறுவனத்திடம் போய் கேளுங்கள் என்று சொல்லியிருக்கிறார். ராஜ்கமல் அலுவலகத்திற்கு செல்ல அவர்கள் இந்தக் கதையை கேட்டதும் இதே கதையில் சூர்யா ஹிந்தியில் நடிக்க இருக்கிறார். நீங்களும் அதே கதையை எடுத்து வந்துள்ளீர்கள் என பெரிய குண்டை தூக்கி போட்டிருக்கிறார்கள்.

இதனால் அதிர்ச்சியடைந்த மகாவீர் கர்ணா படத்தின் இயக்குனர் சூர்யா அலுவலகத்திடம் தொலைபேசியில் விசாரித்ததில் அந்த மாதிரி எதுவும் சூர்யா படம் பண்ணவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். உடனே இயக்குனர் எதுக்கு இந்த வம்பு? இந்த மாதிரி ஒரு படம் இருக்கிறது என்பதை சோசியல் மீடியாவில் தெரிவித்து விடுவோம் என்பதற்காகவே அவசர அவசரமாக நேற்று படத்தின் போஸ்டரை வெளியிட்டிருக்கிறது.

Next Story