விக்ரமிற்கு இன்னும் எதற்கு இந்த வேண்டாத வேலை...! ரசிகர்களின் கோரிக்கையை ஏற்பாரா நம்ம சீயான்...?
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வரும் நடிகர் விக்ரம் சமீபத்தில் வெளியான கோப்ரா படத்தால் பெரும்
விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். படம் மோசமான விமர்சனங்களை பெற்று மக்கள் மத்தியில் பெரும் தோல்வியை தழுவியுள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர்.ரகுமான் இசையில் படம் வெளியானது.
கோப்ரா படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் செம ஹிட். ஆனால் கதையில் கோட்டை விட்டுள்ளது. மேலும் நடிகர் விக்ரமின் நடிப்பு, உழைப்பு, திறமை அனைவரும் அறிந்த ஒன்று. இப்படி இருக்கையில் இன்னும் எதற்காக தான் ஒரு நடிகன் என நிரூபிக்க முயற்சிக்கிறார் என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்கள் : விஜயகாந்திடம் இந்த விஷயத்துல மட்டும் தப்பிக்கவே முடியாது….!மாட்டிக்கிட்டு முழித்த பிரபல நடிகர்….
5 வேடம், 6 வேடம் என கெட்டப்களை மாற்றி நடிப்பை நிரூபிக்க தேவையில்லை. அதற்கு மாறாக கதையில் கவனம் செலுத்தினாலே போதும் என ரசிகர்கள் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். இதற்கு முன் வந்த படங்களை விட கோப்ரா படம் அட்டர் ஃப்ளாப் ஆனதால்
இதையும் படிங்கள் : சூர்யாவுக்கு சினிமா ஒன்னும் தராது…! அவனுக்கு அடையாளமே இது தான்…சிவக்குமாரின் ஆக்ரோஷமான பேச்சு…
விக்ரம் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். இனி வரும் பொன்னியின் செல்வன் படத்திலாவது விக்ரமின் நடிப்பை பார்த்து மனதை ஆற்றிக் கொள்வார்கள் என்ற கருத்து பரவலாக வருகின்றது.