அலைபாயுதே படத்தில் விக்ரமுக்கு வந்த வாய்ப்பு...! நல்ல வேலை நடிக்கல..எந்த கதாபாத்திரம்னு தெரியுமா..?
தமிழ் சினிமாவில் காதலர்களுக்கு என்று சமர்ப்பிக்கும் விதமாக ஏகப்பட்ட படங்கள் தயாரிக்கப்பட்டு இருக்கின்றன. அந்தக் காலகட்டத்தில் இருந்து இன்றைய தலைமுறைகளுக்கு ஏற்ற வகையில் நிறைய மாறுதல்களுடன் காதலை மையப்படுத்தி படங்கள் வந்தன.
அந்த வகையில் வெளியான படம் தான் அலைபாயுதே. மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், ஷாலினி நடிப்பில் வெளிவந்த படம் அலைபாயுதே. இந்த படத்திற்கு ஏஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட். படத்தில் உள்ள பாடல்கள் ரசிகர்கள் முக்கியமாக காதலித்துக் கொண்டிருப்பவர்களை ரசனையில் உச்சிக்கே கொண்டு போய் சேர்த்தன.
இந்த நிலையில் அலைபாயுதே படத்தின் நல்ல ஒரு வாய்ப்பை தவறவிட்டார் நடிகர் விக்ரம் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம். இந்த படத்தில் நடிக்க நடிகர் விக்ரமை அணுகியிருக்கின்றனர். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் விக்ரமால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லையாம். ஆனால் காரணம் இதுவாக கூட இருக்கலாம்.
அதாவது அந்த படத்தில் நடிகை சொர்ணமால்யா ஷாலினிக்கு அக்காவாக நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக ஒருவர் நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்தில் நடிக்க தான் விக்ரமை அணுகியிருக்கின்றனர். ஒரு வேளை இதனால் கூட விக்ரம் மறுத்திருப்பார் என தெரிகிறது.