தளபதி விஜய் ரசிகர்களால் நெகிழ்ந்து போன சியான் விக்ரம்… நடந்த சம்பவம் அந்த மாதிரி.!

Published on: August 19, 2022
---Advertisement---

அஜய் ஞானமுத்து இயக்கிய ‘கோப்ரா’ திரைப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தில் சியான் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் இர்பான் பதான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தற்போது, இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக நேற்று ட்விட்டரில் ஸ்பேஸ் ஒன்றை உருவாக்கி கோப்ரா படத்தை விளம்பரம் படுத்தினார் சியான் விக்ரம். இதில், இயக்குனர் அஜய் ஞானமுத்து உடன் சில பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் அதில் பேசிய விக்ரம், கோப்ரா படத்தை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கும் மற்றொரு படத்திலும் கமிட்டாக இருப்பதாக தெரிவித்தார்.

இந்த ட்விட்டர் ஸ்பேஸில் பலவித விஷயங்களை பகிர்ந்து கொண்ட சியான் விக்ரம், விஜய் ரசிகர்கள் குறித்தும் பேசினார். அதாவது, பொதுவாக சியான் விக்ரமை அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அது போல் விஜய் ரசிகர்களுக்கு விக்ரமை கொஞ்சம் அதிகமாகவே பிடிக்கும்.

இதையும் படிங்களேன் – பெண்ணும் பெண்ணும்… ஆணும் ஆணும்..! பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய பா.ரஞ்சத்தின் புதிய வீடியோ…

இந்த இந்த ட்விட்டர் ஸ்பேஸில் கலந்து கொண்டோர் சிலர் விஜய் ரசிகர்கள் என்று தெரிவந்துள்ளது. இந்நிலையில், இதனை அறிந்த சியான் விக்ரம் விஜய் ரசிர்கள் பலர்  வந்துருக்கீங்க, எல்லாருக்கும் ரொம்ப நன்றி என பெருமிதத்துடன் நன்றி தெரிவித்துள்ளார்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.