எல்லாம் விக்ரம் பார்த்த வேலை..ஓரங்கட்டப்பட்ட விஜய்...பொன்னியின் செல்வன் ட்ராப் ஆன கதை...
மணிரத்னம் இயக்கத்தில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் படம் பொன்னியின் செல்வன் திரைப்படம். இந்த படத்தில் நடிகர்கள் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்றோர் நடித்திருக்கின்றனர். படத்திற்கு ஏஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார்.
படம் வெளியாகி வசூலிலும் 300 கோடிக்கும் மேல் சாதனை படைத்திருக்கிறது. மேலும் இந்த பொன்னியில் செல்வன் நாவலை மூன்று தலைமுறை நடிகர்கள் எடுக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்க அது தற்போது மணிரத்னம் இயக்கத்தில் வீர வாகை சூடி கொண்டிருக்கிறது.
மேலும் மணிரத்னம் இந்த படத்தை 2011 ஆம் ஆண்டில் இருந்தே இதற்கான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது உள்ள சூழ் நிலையில் இந்த படத்தை ஒரே பாகமாக எடுக்க திட்டமிட்ட மணிரத்னம் அதற்கான கதாநாயகர்களை தேர்வு செய்யும் வேலையையும் முடித்திருக்கிறார்.
வந்தியத்தேவனாக விஜய், அருள்மொழிவர்மனாக மகேஷ்பாபு, பெரிய பழுவேட்டரையராக சத்யராஜ், நந்தினியாக, ஆதித்ய கரிகாலராக விக்ரம் என தயாராக இருந்த நேரத்தில் நடிகர் விக்ரம் அப்பொழுது அவருக்கு கரிகாலன் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாக சென்று விட்டார். விக்ரம் இல்லாமல் இந்த படத்தை எப்படி தொடர்ங்குவது என அப்பொழுது டிராப் ஆன படம் தான் பொன்னியின் செல்வன் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த நேரத்தில் விக்ரம் விட்டு போனாலும் திரும்பவும் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்திற்கு அவர் தான் நடிக்க வேண்டும் என மணிரத்னம் மறுபடியும் விக்ரமை நடிக்க வைத்திருக்கிறார். அன்று மட்டும் விக்ரம் இந்த படத்திற்கு ஒத்துழைப்பு தந்திருந்தால் விஜயை வந்தியத்தேவனாக பார்த்திருக்கலாம்.