Actor Vikram:கோலிவுட்டில் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விக்ரம். தன்னுடைய வித்தியாசமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர். தமிழ் சினிமாவில் கமலுக்கு அடுத்தபடியாக விதவிதமான கெட்டப்புகளை போட்டு நடிக்கக்கூடிய ஆற்றல் மிக்கவர் விக்ரம்.
இவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த தங்கலான் திரைப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இதுவரை இல்லாத அளவில் தங்கலான் திரைப்படத்திற்காக மிகவும் மெனக்கிட்டு நடித்திருக்கிறார் விக்ரம். கெட்டப்பிலும் இதுவரை போடாத கெட்டப்பாக இந்த படத்தில் அவருடைய வேடம் பிரமிக்க வைத்திருந்தது.
இதையும் படிங்க:தளபதி விஜய்க்குப் பிடிச்ச தல படம்… மட்ட சாங் முதல்ல பாட்டாவே இல்லையாம்..!
இந்த நிலையில் விக்ரம் கூறிய ஒரு சுவாரசிய தகவல் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றது. அதாவது இந்தி ரசிகர்கள் தமிழ் சினிமாவை பற்றி புரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஒரு குறிப்பிட்ட நான்கு தமிழ் படங்களை நான் பார்க்கச் சொல்வேன் என படங்களின் பெயர்களை பட்டியலிட்டு போட்டு இருக்கிறார் விக்ரம்.
அதில் 16 வயதினிலே, நாயகன் ,உதிரிப்பூக்கள் ,ராவணன் போன்ற நான்கு படங்களை குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார் விக்ரம். இவர் சொன்ன நான்கு படங்களுமே தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற தமிழ் படங்களாகும்.
இதையும் படிங்க: ராமமூர்த்தி இறுதி அஞ்சலி… ரோட்டில் முத்து-மீனா சண்டை.. சிக்கிய தங்கமயில்…
16 வயதினிலே திரைப்படத்தை பாரதிராஜா இயக்க அந்த படம் எப்படிப்பட்ட ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என அனைவருக்குமே தெரியும். மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த உதிரிப்பூக்கள் திரைப்படம் எதார்த்தமான வாழ்வியலை கொண்ட திரைப்படமாக ஒட்டுமொத்த ரசிகர்களை கவர்ந்த படமாக அமைந்தது.
நாயகன், ராவணன் போன்ற படங்களை பற்றி விளக்கமாக சொல்ல வேண்டும் என அவசியம் இல்லை. ஏனெனில் அந்த இரு படங்களின் தாக்கம் இன்று வரை ரசிகர்கள் மனதை விட்டு போகவே இல்லை அந்த அளவுக்கு தகவல் தொழில்நுட்பத்தாலும் சரி கண்டன்ட் வகையிலும் சரி ஒரு தரமான படங்களாகவே வெளிவந்தன.
இதையும் படிங்க: கோட் சிறப்பு காட்சி இருக்கா? இல்லையா?!.. காத்திருக்கும் படக்குழு!.. என்னதான் நடக்குது!…
அதனால் தமிழ் சினிமாவை பற்றி இந்தி ரசிகர்கள் புரிய வேண்டும் என்றால் இந்த நான்கு படங்கள் தான் சரியாக இருக்கும் என விக்ரம் கூறியிருக்கும் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…