இதுக்காகவா அந்த படத்துல நடிக்கல? சூப்பர் ஹிட் படத்தை மிஸ் பண்ண விக்ரம்
Vikram - Gautham menon: தமிழ் சினிமாவில் பல போராட்டங்களுக்கு பிறகு மக்கள் கொண்டாடும் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் விக்ரம். கிட்டத்தட்ட 15 வருடங்கள் போராட்டத்திற்கு பிறகுதான் ஒரு சிறந்த நடிகர் என்ற அந்தஸ்தை விக்ரமால் பெற முடிந்தது.
ஆரம்பத்தில் பிரபுதேவா மற்றும் அப்பாஸ் போன்ற நடிகர்களுக்கு டப்பிங் கொடுக்கும் ஆர்ட்டிஸ்டாகத்தான் இருந்தார் விக்ரம். சேது படம் தான் அவருக்கு ஒரு நல்ல திருப்பு முனையாக அமைந்தது. அந்தப் படத்தில் பாலாவுக்கு உதவியாளராக இருந்தவர் இயக்குனர் அமீர்.
இதையும் படிங்க: ரஜினி பக்கத்துல இருக்க வேணாம்!.. ஷூட்டிங் ஸ்பாட்டை மாற்றிய விஜய்!.. அப்ப அது உண்மைதானா?..
அமீரின் பழக்கம் அந்தப் படத்தில் விக்ரமுக்கு மிகவும் பிடித்துப் போக சில காலம் தன்னுடனேயே தங்க வைத்திருக்கிறார் விக்ரம். அதுமட்டுமில்லாமல் சினிமாவில் சில விஷயங்கள் தனக்கு தெரியாது என்றும் அதனால் என்னுடனேயே இரு என சொல்லி அமீரை தங்க வைத்திருக்கிறார்.
சேது படத்தின் வெற்றிக்குப் பிறகு விக்ரமைத் தேடி பல பட வாய்ப்புகள் தேடி வந்ததாம். விக்ரமை தேடி வந்து கதை சொல்லும் இயக்குனர்கள் எல்லாம் அமீரிடம்தான் கதை சொல்லியிருக்கிறார்கள். விக்ரமிற்காக கிட்டத்தட்ட100 கதைகளை கேட்டிருப்பாராம் அமீர்.
இதையும் படிங்க: எம்ஜிஆர் நடித்து பாதியிலேயே விடப்பட்ட திரைப்படத்தில் நடித்த சிவாஜி! அட இதெல்லாம் சின்னவர் நடித்த படமா?
அப்படி வந்தவர்தான் இயக்குனர் கௌதம் மேனன். காக்க காக்க படத்தின் கதையை முதலில் விக்ரமுக்குத்தான் சொல்லியிருக்கிறார் கௌதம் மேனன். அந்தப் படத்தின் முழு கதையையும் ஆங்கிலத்தில் தான் சொன்னாராம். அமீருக்கு ஏற்கனவே ஆங்கிலம் பேசவும் எழுதவும் தெரியாது என்பதால் கௌதம் மேனன் சொன்ன கதை அமீருக்கு புரியவில்லையாம்.
அதனால் பாதியிலேயே எழுந்து வெளியே வந்துவிட்டாராம். அதன் பிறகு விக்ரம் போன் செய்து அமீரை உள்ளே அழைத்திருக்கிறார். எனினும் காக்க காக்க படத்தின் கதையில் சில உடன்பாடுகள் இல்லாமல் இருந்ததாம் விக்ரமுக்கு.
இதையும் படிங்க: மூடாம காட்டி மூடேத்தும் முல்லை நடிகை!.. காஜி ரசிகர்களை குஷிப்படுத்தும் காவ்யா…
அதனால் கொஞ்ச நாள் போகட்டும் என சொல்லி கௌதம் மேனனை அனுப்பியிருக்கிறார். அதன் பிறகே சூர்யாவிற்கு இந்தப் படத்தின் வாய்ப்பு சென்றதாம்.
COPYRIGHT 2024
Powered By Blinkcms