More
Categories: Cinema News latest news

உண்மைகளை இப்டி போட்டு உடைச்சிடீங்களே.! கமல் படக்குழு மீது கோபத்தில் ரசிகர்கள்.!

கமல்ஹாசன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் விக்ரம். இந்த திரைப்படத்தை மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இவர் பக்கா கமல் ரசிகர். அதனால், இந்த திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது. மேலும், கிட்டதட்ட ரசிகர்கள் எதிர்பார்த்து அனைத்து திரைப்படங்களும் வெளியாகி விட்டன. அடுத்ததாக ரசிகர்கள் காத்திருக்கும் திரைப்படம் விக்ரம் திரைப்படம் தான்.

Advertising
Advertising

இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமல்ஹாசனே  தயாரித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் ஃபாஸில், நரேன், காளிதாஸ் என பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு வீடியோக்கள் வெளியாகி விட்டன. அவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. ஜூன் மூன்றாம் தேதி திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் யார் ஹீரோ, வில்லன், கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்ற போவது யார்? வில்லனாக மிரட்டுவது யார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். அந்த சஸ்பென்சை தற்போது படக்குழு உடைத்துள்ளது.

ஆம், இதில் கமல்ஹாசன் பயம் அறியாதவர் என்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் விஜய்சேதுபதி இரக்கமற்றவர் என அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்ததாக பகத் பாசில் அனைவரையும் பயமுறுத்தும் நபர் என அறிமுகபடுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலமாக விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகிய இருவருமே இப்படத்தில் வில்லனாக நடித்து உள்ளனர் என்பது தெளிவாகியுள்ளது.

இதையும் படியுங்களேன் – இன்னும் பேர் கூட வைக்கல.! அதுக்குள்ள இந்த அஜித் ஃபேன்ஸ் செய்யுற அட்டகாசத்த பாருங்க..,

ரசிகர்கள் சஸ்பென்ஸ் ஆக இருக்கும் என நினைத்த இந்த கதாபாத்திரங்களை தற்போது படக்குழு ரிலீஸ் செய்து விட்டதால் படத்திற்கான சஸ்பென்ஸ் குறைந்து விட்டதே என புலம்பி வருகின்றனர். இருந்தாலும், லோகேஷ் கனகராஜ் திரைக்கதையில் சுவாரஸ்யம் புகுத்தி கண்டிப்பாக நிச்சயம் இப்படத்தை வெற்றி பெற வைப்பார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

Published by
Manikandan