கமலின் சினிமா வரலாற்றிலேயே முதல்முறை!...வசூலில் பட்டைய கிளப்பும் விக்ரம்....

by சிவா |   ( Updated:2022-06-06 09:31:50  )
kamal
X

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 3ம் தேதி உலகமெங்கும் வெளியான திரைப்படம் விக்ரம்.

4 வருடங்களுக்கு பின் கமல் படம் வெளியாவதாலும், லோகேஷ் கனகராஜோடு, கமல் இணைந்திருப்பதாலும் இப்படம் தொடக்கம் முதலே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியது. அதோடு, விஜய் சேதுபதி, பஹத் பாசில் மற்றும் சிறிய வேடத்தில் சூர்யாவும் நடித்திருப்பதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் இப்படத்தை பார்த்து வருகின்றனர்.

vikram

படம் வெளியான அன்றே விக்ரம் படம் தமிழகத்தில் இப்படம் ரூ.25 கோடியை வசூல் செய்தது. படம் வெளியாகி 3 நாட்கள் ஆகியுள்ள நிலையில் உலக அளவில் இப்படம் ரூ.150 கோடி வசூலை தொட்டுள்ளது.

இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலை பெற்றுள்ளது. ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இப்படம் இதுவரை ரூ.50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதையடுத்து டிவிட்டரில் #VikramRoaringSuccess என்கிற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.

vikram

இதில் ஆச்சர்யம் என்னவெனில், கமல்ஹாசன் 62 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். அவர் நடித்த எந்த திரைப்படமும் இவ்வளவு வசூல் செய்ததில்லை. இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story