Connect with us
vikram

Cinema News

பாகுபலி 2 வசூலை தாண்டிய விக்ரம் பட வசூல்.. கெத்து காட்டும் கமல்……

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 3ம் தேதி உலகமெங்கும் வெளியான திரைப்படம் விக்ரம். 4 வருடங்களுக்கு பின் கமல் படம் வெளியாவதாலும், லோகேஷ் கனகராஜோடு, கமல் இணைந்திருப்பதாலும் இப்படம் தொடக்கம் முதலே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியது.

அதோடு, விஜய் சேதுபதி, பஹத் பாசில் மற்றும் சிறிய வேடத்தில் சூர்யாவும் நடித்திருப்பதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் இப்படத்தை பார்த்து வருகின்றனர்.

இப்படத்தின் வசூல் உலக அளவில் ரூ.200 கோடியை தாண்டிவிட்டது. கமல்ஹாசனின் எந்த திரைப்படமும் இவ்வளவு வசூலை பெற்றது கிடையாது. அதேபோல், தமிழகத்திலும் இப்படம் ரூ.70 கோடியை தாண்டியுள்ளது.

இந்நிலையில், சென்னையில் முக்கிய தியேட்டராக பார்க்கப்படும் ரோகினி தியேட்டர் அதிபர் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘விக்ரம் திரைப்படம் நினைத்து பார்க்க முடியாதபடி வசூலை பெற்று வருகிறது. பாகுபலி 2 படத்தின் 5 வருட வசூலை இப்படம் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது’ என அவர் தெரிவித்துள்ளார்.

twitt

google news
Continue Reading

More in Cinema News

To Top